ADVERTISEMENT
சென்னை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தத்தில், அதிக அளவுக்கு கூட்டல் பிழை ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வித் துறை பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, கடந்த கல்வி ஆண்டில் திட்டமிட்டபடி பொதுத் தேர்வு நடத்தப்பட்டன.
இதையடுத்து, விடைத்தாள் திருத்தமும் முடிக்கப்பட்டு, ஜூன் 20ல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.இந்த முறை பிளஸ் 2 தேர்வில், நன்றாக தயாராகி தேர்வு எழுதியும், சரியான மதிப்பெண் கிடைக்காததால், பல மாணவர்கள் சந்தேகம் அடைந்தனர். விடைத்தாள் நகல் கேட்டு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பித்தனர்.அவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் வழங்கப்பட்டது. இதை ஆய்வு செய்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துஉள்ளனர்.பலரின் விடைத்தாள் சரியாக திருத்தப்பட்டபோதும், மதிப்பெண்களை சரியான முறையில் கூட்டி பதிவிடாதது தெரியவந்துள்ளது.

சில மாணவர்களுக்கு 70க்கும் மேல் மதிப்பெண்கள் வித்தியாசம் ஏற்பட்டுள்ளது. கூட்டல் பிழையால், பல மாணவர்கள் தேர்ச்சி மதிப்பெண்கள் கூட பெற முடியாத அளவுக்கு, தேர்வு முடிவு வந்துள்ளது.ஒரு மாணவர் விடைத்தாளில் 76 மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், அவருக்கு 6 மதிப்பெண் மட்டும், விடைத்தாள் முகப்பில் பதிவு செய்துள்ளது தெரியவந்து உள்ளது.அரசு தேர்வுத் துறை நடத்திய விடைத்தாள் திருத்தத்தில் ஏற்பட்டுள்ள இந்த கூட்டல் பிழை, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பிக்காத மாணவர்கள், தங்களுக்கு இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டு, மதிப்பெண் குறைந்திருக்குமோ என்றும் சந்தேகம் அடைந்துஉள்ளனர்.எனவே, கூட்டல் பிழை செய்த ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், விடைத்தாளை ஆய்வு செய்யாத தலைமை திருத்துனர்கள், துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.மேலும், சந்தேகம் ஏற்பட்டுள்ள மாணவர்களுக்கு, விடைத்தாள் நகல் வழங்க இன்னும் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வாசகர் கருத்து (26)
உடனடியாக வேலையை விட்டு நீக்க வேண்டும் ..
Is it possible for poor parents to call for answer papers and de,and re-valuation? They will have to be detained and their children's future will be ruined So, if totaling is mistakenly done, the concerned teacher, supervisor have to bear the fees and Govt. Should refund it with penalty. But what about the loss of schooling for a whole year? Such students may go to extreme decisions. But 'vidiyal Govt,' won't care
இதுவும் திராவிட மாடல் ஆட்சியின் ஒரு அங்கமே .
கேடுகெட்ட விடியாத இந்த துக்ளக் ஆட்சியில் இவ்வாறு நடப்பது சகஜம் தானே... அமைச்சனோ சின்னவனை புகழவே நேரம் இல்லை அதில் இந்த வெரலைகளை கவனிப்பது சிரமம் தானே....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இதுவும் காசு பார்க்க ஓரு சின்ன வழி தான்... மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க பணம் கட்டணும்... முதல்லயே சரியா கூட்டினா எப்படி காசு புடுங்க முடியும்?