Load Image
Advertisement

தே.ஜ. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜக்தீப் தங்கார்

 தே.ஜ. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜக்தீப் தங்கார்
ADVERTISEMENT
பா.ஜ., தலைமையிலான தே.ஜ. கூட்டணி துணை ஜனாதிபதி வேட்பாளராக மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார்.


@1br வரும் ஆகஸ்ட் 6-ல், துணை ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான வேட்புமனு தாக்கல், ஜூலை 5-ல் துவங்கியது; வரும் 19ல் முடிகிறது. இன்னும் மூன்று நாட்களே இருக்கும் நிலையில், ஆளும் பா.ஜ., கூட்டணி தன் வேட்பாளரை அறிவிக்கவில்லை.

Latest Tamil News
ஜனாதிபதி பதவிக்கு பழங்குடியினத்தைச் சேர்ந்த திரவுபதி முர்முவை நிறுத்தியுள்ள பா.ஜ., தலைமை, துணை ஜனாதிபதி பதவிக்கு முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது. கேரள கவர்னர் ஆரிப் முகமது கான், மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன.

இந்நிலையில் துணை ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பது தொடர்பாக டில்லியில் இன்று பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூடியது.
இதில் துணை ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தங்கார் பெயரை பா.ஜ. தேசிய தலைவர் நட்டா அறிவித்தார்.


வாசகர் கருத்து (16)

  • அப்புசாமி -

    இவர் பழங்குடியா? பெருங்குடியா? ராஜ்யசபாவை வழிநடத்த திறமை வேணுமோ?

  • Sathyanarayanan Sathyasekaren -

    0 …..

  • Rajasekaran - Chennai,இந்தியா

    தாடகை கண்களில் விரலை விட்டு ஆட்டியவர்க்கு குட்டிச்சாத்தான்கள் ஒரு பொருட்டா ? ராஜ்ய சபா நடவடிக்கைகளில் போகப் போகத் தெரியும்

  • parsath - dam,சவுதி அரேபியா

    இந்த பேரு நம்ம லிஸ்ட் ல இல்லை

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    இனி மமதையின் கட்சியின் வாக்குகளும் கிடைக்கும். பாவம் அந்த யஷ்வந்த சின்ஹா. சும்மா இருந்தவரை கட்சியிலிருந்து விலக சொல்லி இப்போது அவர் நிம்மதியாக வீட்டில் முடங்கி கிடக்க வேண்டிய நிலைமை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்