"ஓ.பன்னீர்செல்வம் விரைந்து நலம் பெற விழைகிறேன்" - முதல்வர் ஸ்டாலின்

கடந்த சில நாட்களாக கோவிட் பாதிப்பால் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மேலும் சில நாட்களுக்கு மருத்துவமனையில் தங்கி இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்நிலையில் அதிமுகவின் ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோவிட் பாதிப்பால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் நலம் பெற வேண்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்;

" கோவிட் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் விரைந்து முழுமையாக நலம்பெற விழைகிறேன்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (36)
சுடலையின் தலைக் கவசம் இல்லாத பழைய புகைப்படத்தை வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கின்றேன்.
ரெண்டு பேரும் ஏதோ திட்டம் போட்டுதான் இப்படி கோவிட் என்று சொல்லி மருத்துவமனையில் சேர்ந்திருப்பாங்க போலிருக்கு.
////
இது பரஸ்பர மனிதாபிமான விசாரிப்பு. உதய நிதியை அண்ணாமலை சந்தித்தது போலத்தான் இதுவும். எடப்பாடி முதல்வரை நலம் விசாரித்திருக்க வேண்டும், அதுதான் நல்ல பண்பு. கருணாநிதி ஜெயலலிதா போல தொண்டர்களை பிரித்து பகையாக வைத்திருந்தால் தலைமைக்கு அழகு என்று நினைத்தால் இன்றய தலைமுறை எடப்பாடியாரை புறக்கணித்துவிடும். நலமும் விசாரியுங்கள், தவறுகளையும் தட்டிக்கேட்க தயங்கவேண்டாம். அதைவிடுத்து ஸ்டாலினை பார்த்து சிரித்தார் என தொண்டர்களை விளக்கி வைத்தால் ஆட்சி பகல் கனவுதான்.
....