ஜனாதிபதி தேர்தலில் திரவுபதி வெற்றி உறுதி: 60 சதவீத ஓட்டுகள் கிடைக்க வாய்ப்பு

தேர்தல் நெருங்கும் நேரத்தில் திரவுபதி முர்முவுக்கு, எதிர்க்கட்சி கூடாரத்தில் இருந்தும் ஆதரவு அதிகரித்து வருகிறது. ஒடிசாவின் ஆளுங்கட்சியான பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஆளுங்கட்சியான ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.கர்நாடகாவில் தேவ கவுடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம், பஞ்சாபில் அகாலி தளம், மஹாராஷ்டிராவில் சிவசேனா, ஜார்க்கண்டில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆகிய கட்சிகளும் திரவுபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அ.தி.மு.க., பகுஜன் சமாஜ் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. பா.ஜ.,வை அரசியல் ரீதியாக கடுமையாக எதிர்க்கும் அகாலி தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சிவசேனா ஆகிய கட்சிகளும் திரவுபதிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. திரவுபதி முர்மு பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண் என்பதால், பா.ஜ., எதிர்பார்க்காத கட்சிகளில் இருந்தெல்லாம் தொடர்ந்து ஆதரவு அதிகரித்து வருகிறது. தற்போது லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் 776 எம்.பி.,க்கள் உள்ளனர். ஒவ்வொரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பும் 700 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதில், பா.ஜ.,வுக்கு மட்டுமே 393 எம்.பி.,க்கள் உள்ளனர். தே.ஜ., கூட்டணிக்கு 440 எம்.பி.,க்கள் உள்ளனர். இது தவிர, பல்வேறு மாநிலங்களிலும் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டுகளும் திரவுபதிக்கு கிடைக்கும். எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு, ஒவ்வொரு மாநிலத்துக்கும் மாறுபடும். உ.பி.,யில் உள்ள 273 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் வாயிலாக மட்டுமே, திரவுபதிக்கு 56 ஆயிரத்து 784 ஓட்டுகள் கிடைக்கும். இங்கு, ஒரு எம்.எல்.ஏ.,வின் ஓட்டு மதிப்பு 208 என நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
இதன்படி கணக்கிடும்போது, மொத்தமுள்ள 10 லட்சத்து 86 ஆயிரத்து 431 ஓட்டுகளில், திரவுபதிக்கு 6.67 லட்சம் ஓட்டுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் வாயிலாக பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண், நாட்டின் முதல் குடிமகள் அரியணையில் அமர்வதற்கான வாய்ப்பு உறுதியாகி உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி தேர்தலில் எம்.பி.,க்களுக்கு பச்சை நிறத்திலும், எம்.எல்.ஏ.,க்களுக்கு 'பிங்க்' எனப்படும் இளம் சிவப்பு நிறத்திலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பும் 700 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகை அடிப்படையில், எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும். ஓட்டுச் சீட்டில் இரண்டு பிரிவுகள் இடம் பெற்றிருக்கும். முதல் பிரிவில், வேட்பாளரின் பெயர் இடம் பெற்றிருக்கும். இரண்டாவது பிரிவில், யாருக்கு ஓட்டுச் செலுத்த வேண்டும் என்பதை குறிப்பிடும் விபரம் இடம் பெற்றிருக்கும். ஜனாதிபதிக்கான தேர்தல், பார்லிமென்ட் வளாகத்திலும், ஒவ்வொரு மாநில சட்டசபை வளாகத்திலும் நடக்கும்.
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது. சமாஜ்வாதி கூட்டணியில் இடம் பெற்றிருந்த ஓம் பிரகாஷ் ராஜ்பரின் சுகேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.,வின் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
வாசகர் கருத்து (8)
நாட்டின் முதல் குடிமகன் / குடிமகள் என்பவர் என்பது நாட்டின் உச்சபட்ச பதவி. அனைத்துக் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். கிட்டத்தட்ட போட்டியாளர்களே இல்லாதவராக இருக்க வேண்டும். 141 மக்கள் தொகை கொண்ட இந்த பரந்துபட்ட இந்திய நாட்டில் அப்படிப்பட்ட நிறைய பேர்கள் இருக்கவே இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களின் ஒருவரைக் கண்டுபிடித்து குடியரசுத் தலைமைப் பதவிக்கு நிறுத்தலாம். அனைத்திலும் அரசியல் பார்க்காமல், நாட்டின் குடியரசுத் தலைவர் பதிவிக்காகவாவது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துக்கொள்ளக் கூடிய ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். ஆளும் கட்சி நினைத்தால் அந்த நிலையை ஏற்படுத்த முடியும். ஆனால்.... நினைக்க வேண்டுமே...
மாநிலங்களில் இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களுக்கே சகிதமாக வந்து தேர்தல் வெற்றிக்கு வேலை செய்வோர் இந்த தேர்தல் வெற்றிக்கு FULL SWING ஆக வேலை செய்யமாட்டார்களா, என்ன?...
அறிய கண்டுபிடுப்பு
....
ஸ்டாலின் ஓட்டு யாருக்கு??