தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம், கோடநாடு பகுதியில் உள்ள பங்களாவில் தங்கி வந்தார். இவரது மறைவுக்கு பின், 2017 ஏப்.,23ல் அந்த பங்களாவில் மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்டனர்.தடுக்க முயன்ற காவலாளி ஓம் பகதுார், 57, கொல்லப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதுார், 37, என்பவர் படுகாயமடைந்து உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்தனர்.
கோடநாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக பணிபுரிந்த நீலகிரி மாவட்டம், கொங்கையரைச் சேர்ந்த தினேஷ்குமார், 29, தற்கொலை செய்து இறந்தார்.கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இரு தினங்களுக்கு முன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுகுட்டி, தொழில் வர்த்தகர்கள் ஆறுமுகசாமி, இவரது மகன் செந்தில்குமார், புதுச்சேரி தனியார் விடுதி உரிமையாளர் நவீன் பாலாஜி உள்ளிட்டோரிடம் விசாரித்து வாக்குமூலம் பெற்றனர்.சென்னை சி.ஐ.டி., காலனியில், செந்தில்குமாருக்கு சொந்தமான அலுவலத்தில், கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி, சில ஆவணங்களை கைப்பற்றினர்.
இதற்கிடையே, ஏப்ரலில், ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலாவிடம், இரண்டு நாட்களாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர்; வீடியோ பதிவும் செய்தனர்.கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில், 230க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சசிகலாவிடம் மீண்டும் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து (9)
மொதல்ல அமைச்சரின் தம்பி ராமஜெயத்தை கொன்றவர்கள் யாருன்னு கண்டுபிடிக்க துப்பில்லத்தவனுவோளா இத கண்டு புடிக்க போறானுவோன்னு மக்கள் பேசிக்கிறாங்க.....
அக்காவின் தங்கைக்கு வந்த சோதனை அப்பப்பா.
கொடநாடு கொலைகள் ஒன்றும் பரம ரகசியமல்ல. ஜெயாவின் மூலம் சசிகலா சம்பாதித்த பல லட்சம் கோடி மதிப்பிலான சொத்துக்கள் பாதுகாக்கப்பட்டன. அதில் பல அதிமுக அமைச்சர்களின் ரகசியங்களும் அடக்கம். அதை கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகம்தான் இந்த ஜெயாவின் வாட்ச் கொள்ளை. இப்போது, இந்த வழக்கை தோண்டி துருவினால், எடப்பாடி, பன்னீர் மற்றும் சசிகலா உட்பட அதிமுகவின் மேலிட புள்ளிகள் அனைவரும் மாட்டுவார்கள். அதனால்தான் வாய் திறக்க மறுக்கிறார்கள். இவ்வளவு நாள் ஊமை குசும்பனாக இருந்த பன்னீர் இப்போது இந்த வழக்கை துரிதப்படுத்துகிறார். இவர்கள் அனைவரையும் உள்ளே தள்ளி அவர்களின் கொள்ளை சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும். மோடி மட்டுமே நேர்மையாக நடவடிக்கை எடுப்பார். தமிழக முதல்வர் நேர்மையாக செயல்படுவது கேளிவிக்குறித்தான். ஏனென்றால், அவர்களிடமே ஏராளமான கறை இருக்கிறது.
ராமஜெயம் கொலை குற்றவாளிகளை பிடிக்க மனமில்லை. அதிலும்😉 உள்நோக்கம்?.?
சீக்கிரம் பெங்களூரு பாராப்பண அக்ரஹாரா சிறையில் இவருக்கு ஒரு இடம் ரிசர்வ் பண்ணுங்கப்பா.