Load Image
Advertisement

காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க ரூ.1 கோடி வழங்க தயார்: அண்ணாமலை

சென்னை-'மறைந்த முதல்வர் காமராஜரின் நினைவிடத்தை சீரமைக்க, 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Latest Tamil News


அவரது அறிக்கை:பல தலைவர்களின் நினைவிடங்கள், சென்னை மெரினா கடற்கரையில் இரவிலும் ஜொலிக்கும் வகையில் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.ஆனால், ஒப்பற்ற தலைவர் காமராஜரின் நினைவிடம் உட்பட, காந்தியை பின்பற்றிய தலைவர்களின் நினைவிடங்கள் கிண்டியில் கவனிப்பாரற்று கிடக்கின்றன.காமராஜர் நினைவிடத்தை, மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் நினைவிடத்தை போல சீர்படுத்தி, மக்களை கவரும் வண்ணம் அமைக்க வேண்டுமென முதல்வர் ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன்.


இதற்காக, தமிழக பா.ஜ., சார்பில், 1 கோடி ரூபாய் நிதி திரட்டி முதல்வரிடம் வழங்க தயாராக இருக்கிறோம்.நினைவிடத்தை சீரமைக்க இயலாவிட்டால், அதை சீரமைக்கவும், பராமரிக்கவும் பா.ஜ.,வுக்கு அரசு அனுமதி தந்தால், மேலும் கூடுதல் நிதி திரட்டி, முக்கியமான சுற்றுலா தலமாக மாற்றுவோம் என, உறுதியாக தெரிவித்து கொள்கிறேன்.

Latest Tamil News
காமராஜர் பிறந்த நாள் விழா பேச்சு போட்டியை பா.ஜ., கல்வியாளர் பிரிவு ஏற்பாடு செய்துள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கு இடையே நடக்கும் போட்டியில் வெற்றி பெறக் கூடிய முதல் மாணவருக்கு, 1 லட்சம்; இரண்டாம் பரிசு, 50 ஆயிரம்; மூன்றாம் பரிசாக, 25 ஆயிரம்; 117 பேருக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.காமராஜரின் பிறந்த நாளில், பா.ஜ., சுதந்திர தின அமிர்த பெருவிழா நிறைவு நிகழ்ச்சிகளை துவங்க உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!வாசகர் கருத்து (16)

 • குமரன் -

  ஒரு தன்னலமற்ற மகத்தான தலைவரை யார் வேண்டுமானாலும் அவரது மாண்பை சொல்லலும் ஏனெனில் அவர் அனைவருக்குமானவர் ஒரு ஜாதி ஒரு மதம் என்று அந்த வட்டத்துக்குள் அடைத்து விடாதீர்கள் காமராஜரை ஏளனம் செய்து தேர்தலில் தோல்வியுறச்செய்த கட்சியுடன் கூட்டணியே வைத்துள்ளார்கள், படத்துக்கு மாலையிட்டால் குற்றமா?

 • Bala - Bavani,இந்தியா

  காமராஜருக்கு ...கும் என்ன சம்பந்தம்

 • Sidhaarth - SENGOTTAI ,இந்தியா

  பிஜேபிக்கும் காமராஜருக்கும் என்ன சம்மந்தம்? டெல்லியில் காமராஜர் இருந்தபோது அவரது வீட்டை கொளுத்தியவர்கள் யார்?

 • அப்புசாமி -

  போற போக்குல நேருவுக்கும் விழா எடுப்பாங்க.

 • duruvasar - indraprastham,இந்தியா

  கருணாநிதி நினைவிடத்திற்கு வந்து செல்பவர்களுக்கு தயிர் வடை அளிக்க வழி வகை செய்யவேண்டும். காமராஜ் மண்டபம் அப்பறம் பார்த்துக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்