Load Image
Advertisement

மேற்கு வங்க நிலக்கரி ஊழல் : அரசு அதிகாரிகள் 7 பேர் கைது

  மேற்கு வங்க நிலக்கரி ஊழல் : அரசு அதிகாரிகள் 7 பேர் கைது
ADVERTISEMENT

கோல்கட்டா : மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது.
இங்கு அசன்சோல் என்ற இடத்தில், சட்ட விரோதமாக நிலக்கரி சுரங்கம் தோண்டியது மற்றும் அங்கிருந்து எடுக்கப்பட்ட நிலக்கரி பல்வேறு மாநிலங்களுக்கும் கடத்தப்
பட்டது குறித்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், ஆளும் திரிணமுல் காங்., தலைவர்கள் மற்றும் மாநில அரசின், 'ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ்' பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.

Latest Tamil News
இந்த விவகாரத்தில், அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு 1,300 கோடி ரூபாய் வரை பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாக சி.பி.ஐ., தெரிவித்தது.
இந்நிலையில், ஈஸ்டர்ன் கோல்பீல்ட்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பொது மேலாளர் மூவர் மற்றும் இந்நாள் பொது மேலாளர், இரண்டு பாதுகாவலர்கள், மற்றுமொரு மேலாளரிடம் சி.பி.ஐ., விசாரணை நடத்தியது.
விசாரணையின் போது அவர்கள் திருப்திகரமாக பதில் அளிக்கவில்லை என்றும், பல்வேறு உண்மைகளை மறைப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஊழலில் இவர்களுக்கு நேரடி தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததை அடுத்து, ஏழு பேரையும் சி.பி.ஐ., கைது செய்தது.


வாசகர் கருத்து (6)

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    முக்கியமான ஆளை விட்டுட்டீங்களே... அதான் அந்த "தீதி","பான் பூரி" புகழ் அம்மையாரை பிடியுங்க. விசாரிங்க... உண்மை வெளிய வரும்...

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    சட்டிஸ்கர் நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கில், மாஜி பிரதமர் மன்மோகன் (நேரடியாகத் தொடர்பிருந்ததாக விசாரணையில் கண்டறியப்பட்டும் கூட) ஏன் கைது செய்யப்படவில்லை ?

  • Soumya - Trichy,இந்தியா

    மும்தா பேகத்தையும் கைது செய்யுங்கள்

  • sankar - Nellai,இந்தியா

    திகார் செல்லும் நாளே வங்கத்தின் பொன்னால்

  • sankar - Nellai,இந்தியா

    அப்டிப்போடு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement