மாணவர்களிடம் அண்ணாமலையை பிரபலப்படுத்த பா.ஜ.,வினர் முயற்சி

இதன்படி, குறிப்பிட்ட சில பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களை, குலுக்கல் முறையில் தேர்வு செய்து வருகின்றனர். மாணவர்களுக்கு வழங்கப்படும் குலுக்கல் அட்டையில், 'வருங்கால முதல்வரை சந்தியுங்கள்' என, ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.'தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்' என, பா.ஜ., வினர் கூறி வரும் நிலையில், பா.ஜ., தலைவர் அண்ணா மலையை, முதல்வர் வேட்பாளராக, வெளிப்படையாகவே அடையாளம் காண்பிக்கும் வகையில் பா.ஜ.,வினர் அதிரடி காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் செந்தில்வேல் கூறியதாவது:கட்சியின் மாநில தலைவர், ஐ.பி.எஸ்., அதிகாரியாக இருந்தவர். நாட்டு நடப்பை துல்லியமாக அறிந்து, லஞ்சம், லாவண்யமற்ற அரசு செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில், அவர் அரசியல் நடத்தி வருகிறார்.அவரது கருத்துகள், மாணவ சமுதாயத்தினரை சென்றடைய வேண்டும்; அரசியல், சமூகம் சார்ந்து மாணவ - மாணவியர் தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கில், மாநில அளவில் முதன் முறையாக, மாணவர் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (51)
தமிழகத்தின் கோத்தபாய கோபாலபுரம் இனி காணாமல்போக, மாணவர்களின் மனதில் உள்ள திராவிட நஞ்சை முறிக்க இதுதான் சிறந்த மருந்து
ஆட்டத்தை தொடங்கியது பா.ஜா.க. - ஆட்டம் காண தொடங்கியதுன்னு தலைப்பு வெச்சிருக்கனும். கொஞ்சமாவது மனசாட்சி வேணாமா? தனியா நின்னா deposit கூட வாங்காது ஆடு.
ஆட்டுக்குட்டி படகு ஒட்டிய புகைப்படத்த போட்டிருந்தா மிக சிறப்பாக இருந்திருக்கும். ஒரு அற்புதமான முன்னோடி எப்படி இருக்கவேண்டும் என்று மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள்
சுதந்திர போராட்டத்தின் போது மாணவர்களின் பங்களிப்பும் அர்ப்பணிப்பும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தது. இப்போதும் தமிழ் நாட்டில் ஒரு சுதந்திரப்போராட்டம் தான் நடக்கிறது குடிக்கும், போதைக்கும் மாணவர்களை கொஞ்சம் கொஞ்சமாக சீரழித்துக் கொண்டு அவர்களுக்கு சிறந்த கல்வி கிடைத்தால் தங்கள் பிழைப்பு நடக்காது, தங்கள் அக்கிரமச்செயல்களை தட்டிக் கேட்கும் அளவிற்கு ஆற்றல் பெற்று விடுவார்கள் என்ற அச்சத்திலும், தேசிய நீரோட்டத்தில் இவர்களை இணைய விடாமல் தடுக்க என்னென்ன உத்திகளைக் கையில் எடுக்கலாம் என்பதையே எப்போதும் சிந்தித்துக்கொண்டு அதன்படி கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாகதமிழினத்தை சீரழித்த திராவிட ஆட்சிகளுக்கு முடிவு கட்ட இறைவனால் அனுப்பப்பட்ட தற்போதைய பா.ஜ க இதுபோன்ற முயற்சிகளை முடுக்கி விட்டால் தான் மாணவ சமுதாயத்தை திராவிட மாயையிலிருந்து விடுவித்து அவர்களுக்கு ஒளிமிகுந்த எதிர்காலத்தை காண்பிக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தில், அவர்களிடம் தேச பக்தியை அதிகப்படுத்த அக்னிபத் திட்டத்தின் நன்மைகளை விபரமாக எடுத்துரைக்கவும் வேண்டும். வளமான, அமைதியான இந்தியா அமைய தமிழக மாணவ சமூகத்திற்கு இருக்கும் பெரும் பொறுப்பையும் அவர்கள் இம்முயற்சிகளின் வாயிலாக நன்கு புரிந்து கொண்டு செயலாற்றுவார்கள்.
சூரி அண்ணனுக்கு நல்ல வேட்ட போல. எத்தன 200 னு எண்ண கூட முடியல