மின் உற்பத்தி செய்ய முடிவு ; மேகமலையில் அணைகள் நிரம்புகின்றன.
மேகமலையில் ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணைகள் உள்ளன. ஹைவேவிஸ் அணையில் இருந்து நீர் சுரங்கபாதை வழியாக மணலாறு, வெண்ணியாறு, இரவங்கலாறு அணையை அடைகிறது.

இரவங்கலாறு அணையில் இருந்து அடர்த்த வனப்பகுதி வழியாக பைப் மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டு, வண்ணாத்திபாறை சுருளியாறு மின் நிலையத்தில் 35 மெகாவாட் மின் உற்பத்தி நடந்தது. ஓராண்டிற்கு முன்பு இரவங்கலாறு அணையிலிருந்து செல்லும் குழாய் உடைந்தது. இதனால் சுருளியாறு மின்நிலையம் மூடப்பட்டுள்ளது.
தற்போது தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால், மணலாறு அணை 1482 மீ.,நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இன்னமும் 10 மீ., உயர்ந்தால் நீரை வெளியேற்ற வேண்டும். முழு கொள்ளளவை சில நாட்களில் எட்டிவிடும். அப்போது இரவங்கலாறு அணையிலிருந்து சுருளியாறு மின்நிலையத்திற்கு பின்பக்கம் செல்லும் பி4 வாய்க்காலில் நீரை திறந்துவிட்டு, குள்ளப்பகவுண்டன்பட்டி மைக்ரோ பவர் ஸ்டேஷனில் 4 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

வாசகர் கருத்து (4)
அதுக்கு ஒரு ஆய்வு குழு சம்பளம், நிதி ஒதுக்கீடு, டெண்டர்கள் வரவேற்பு மற்றும் இதர செலவுகள்ன்னு கணக்கு எழுதுவார்கள்.. மக்கள் வரி பணம் enjoy
இந்த அணையில் உபயோகப்படுத்தப்படும் குளாயானது செவ்வாய் கிரகத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகவே எலானை நோக்கி காதிருக்கிறார்கள்.
உடைந்த குழாயை சரி செய்ய ஒரு வருடமா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Kindly ute the repair work of the pipeline leading to power station for power production