ADVERTISEMENT
சென்னை : தனியார் செவிலியர் கல்லுாரி மாணவிக்கு, கல்விக் கடன் கிடைக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜாமின் அளித்து உள்ளார்.சென்னையில் உள்ள தனியார் செவிலியர் கல்லுாரியில், பட்டப் படிப்பு இறுதியாண்டு படித்து வரும் மாணவி மோகன பிரியா. இவரது பெற்றோர் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர்.
எனவே, கல்வியை தொடர கல்விக் கடன் கேட்டு, தாட்கோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்து இருந்தார்.
இதுபோன்று கல்விக் கட்டணம் செலுத்த இயலாத, எஸ்.சி., பிரிவு மாணவ - மாணவியர், தாட்கோவில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என, கந்தசாமி அறிவித்துள்ளார்.
எனவே, கல்வியை தொடர கல்விக் கடன் கேட்டு, தாட்கோவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் விண்ணப்பித்து இருந்தார்.
இவருக்கு கடன் வழங்க, யாரும் ஜாமின் போட முன் வரவில்லை. இதையறிந்த தாட்கோ மேலாண்மை இயக்குனர்கந்தசாமி, மாணவியின் கல்விக் கடனுக்கு, தானே சொந்த ஜாமின்தாரராக கையொப்பம் இட்டு உள்ளார். இதையடுத்து, மாணவிக்கு 1.89 லட்சம் ரூபாய் கல்விக் கடன் கிடைத்துள்ளது.மாணவி படிப்பை முடித்து, பணியில் சேர்ந்த பின், தாட்கோவிற்கு கல்விக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டும் என, கந்தசாமி அறிவுரை வழங்கி உள்ளார்.
இதுபோன்று கல்விக் கட்டணம் செலுத்த இயலாத, எஸ்.சி., பிரிவு மாணவ - மாணவியர், தாட்கோவில் விண்ணப்பித்து கல்விக் கடன் பெற்றுக் கொள்ளலாம் என, கந்தசாமி அறிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
அதிகாரிக்கு பாராட்டுகள். ஆனால் 2 வருடமாக ஏன் கடன் உதவியை ஆதி.திராவிட நலத் துறை வழங்க வில்லை. அதற்கு யார் காரணம். நிச்சயம் பிஜேபி யோ அல்லது மோடியோ காரணமா ? இந்த மாதிரி எத்தனை விண்ணப்பங்கள் கிடப்பில் கிடக்கிறது அல்லது நிராகரிக்கப்பட்டது ? இத்தனைக்கும் இந்த துறை அதிகாரிகள் ஆதிதிராவிட வகுப்பை சேர்ந்தவர்கள். கடமையை சரியாக செய்யாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை அரசு எடுக்கப் போகிறது ?