ADVERTISEMENT
சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி ஜூலை 28ல் சென்னை வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'போர் பாயின்ட்ஸ்' விடுதியில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, வரும் 28ம் தேதி முதல், அடுத்த மாதம் 10ம் தேதி வரை நடக்கிறது. இதில் 188 நாடுகளில் இருந்து 343 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான டிக்கெட் விற்பனை நேற்று (ஜூலை 12) துவங்கியது. இப்போட்டிக்கான தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் வருகிற 28ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த நிலையில், நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை துவங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 28ம் தேதி சென்னை வருகிறார். ஏற்கனவே கடந்த ஜூன் 19ம் தேதி டில்லியில் நடைபெற்ற விழாவில் செஸ் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டத்தை பிரதமர் துவக்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
வாசகர் கருத்து (3)
இங்கே விடியா அரசு செய்வதே தண்டச் செலவுன்னு ஒரு கூட்டம் சொல்லுது. இதுல ஒன்றிய அரசு வேற வந்து கூடுதல் தண்டச் செலவு. போக்குவரத்தை முடக்கி மக்களுக்கு நன்மை.
அடுத்த 3-4 வருடங்களுக்கு தலைவர் காபி குடிக்கலாம் என நினைத்தால் கூட இங்கதான் வருவார். வருக வருக....நிறைய சரி செய்ய வேண்டி இருக்கு இங்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
....