ஈரோட்டில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட கும்பலால் பரபரப்பு
ஈரோட்டில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட, 15 பேரை பிடித்து, ஹிந்து முன்னணியினர் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
ஈரோடு, சூளை, ஈ.பி.பி.நகர், ஜனதா காலனியில் நேற்று மாலை, வேனில் வந்த, 15 பேர் குழுவினர், பள்ளி மாணவ, மாணவியர், வீடுகள், கடைகள் மற்றும் நடந்து செல்வோரிடம், கிறிஸ்தவ மத புத்தகங்களை வினியோகித்தனர்.
அதன் பெருமை குறித்தும் கூறி பிரசாரம் செய்தனர். அங்கு கடை வைத்துள்ள ஹிந்து முன்னணி பிரமுகர் சவுந்தர்ராஜன், 30, கடையிலும் கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து அறிந்த ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் சங்கர், மாநகர பொது செயலாளர் சக்தி முருகேஷ் உள்ளிட்ட, 20 பேர் கூடினர். மத பிரசாரத்தில் ஈடுபட்ட, 15 பேரையும் சுற்றி வளைத்து, வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சென்று, 15 பேரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். ஹிந்து முன்னணியினரும் ஸ்டேஷனுக்கு சென்று, மத மாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதாக புகார் அளித்தனர். வேனில் வந்த துாத்துக்குடியை சேர்ந்த பாஸ்டர் வினோத், 46; மற்றும் 14 பேர், சூளை, ஈ.பி.பி.நகர் குளோரி விக்டரி ஜெபகூட பாஸ்டர் பால் கிறிஸ்டோபர், 49, ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர்.
பால் கிறிஸ்டோபர் வீட்டுக்கு ஜெபம் செய்ய வந்ததும், அவருக்கு தெரியாமல் புத்தகம் வினியோகித்ததும் தெரியவந்தது. தாங்கள் செய்தது தவறு என்று கூறி, மன்னிப்பு கேட்டதால், அதையேற்ற ஹிந்து முன்னணியினர் அங்கிருந்து சென்றனர். வேனில் அட்டை பெட்டிகளில் இருந்த, 6,௦௦௦ புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

+2 மாணவர்களே!
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!