கட்டாய மதமாற்றம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
கிருஷ்ணகிரி நகர இந்து முன்னணி துணைத்தலைவர் சபரிநாதன், கிருஷ்ணகிரி டவுன் போலீசில் அளித்த புகாரில் தெரிவித்துள்ளதாவது:
கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகம் அருகில், ஒருவர் பொதுமக்களுக்கு மதமாற்ற நோட்டீஸ் வினியோகம் செய்தார். அப்போது, ஹிந்து கடவுள் அனைத்தும் சாத்தான் என்றும், ஜெப கூட்டத்திற்கு வந்து, ஜெபம் செய்யுமாறும் அழைத்து, கட்டாய மதமாற்றத்தில் ஈடுபட்டார். அங்கு வந்த இந்து முன்னணி மாவட்டத்தலைவர் கலைகோபி மற்றும் பொறுப்பாளர்கள், அந்த நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், கிருஷ்ணகிரி தொன்னைகான் கொட்டாய் எம்.ஜி.ஆர்., நகரை சேர்ந்த பால்டேனியல், 67, என்பதும், அருகில் மிஸ்பா திருச்
சபையில் ஊழியர் என்பதும் தெரியவந்தது. எனவே, கட்டாய கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபட்ட அவர் மீது நடவடிக்கை எடுத்து, சட்ட விரோத ஜெபகூட்டத்தை மூட வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!