இலங்கையில் நிலவி வரும் கடும் விலைவாசி உயர்வை சமாளிக்க முடியாத மக்கள், அந்நாட்டு அரசுக்கு எதிராக வெகுண்டு எழுந்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் மாளிகையை, லட்சக்கணக்கான போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டு உள்ளே புகுந்தனர். போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைவதற்கு முன், கடற்படை உதவியுடன் அதிபர் கோத்தபய ராஜபக்சே வெளியேறி, கடற்படைக்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கோத்தபய தனது குடும்பத்தார் மற்றும் பாதுகாவலர்களுடன், ராணுவ விமானத்தில் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பி சென்றார். அதிகாலை 3 மணி அளவில் அவர் மாலத்தீவுக்கு சென்றடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கோத்தபய ராஜபக்சேவை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி மாலத்தீவு அதிபர் மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தினர். கோத்தபயவுக்கு அடைக்கலம் கொடுக்கக்கூடாது என வலியுறுத்தி உள்ளனர்.
வாசகர் கருத்து (22)
மாலத்தீவு என்கிற கருமாந்தரம் புடிச்ச தேசம். காசுக்காக என்ன வேணும்னாலும் செய்யும். அதுக்கு நாமளும் நிறைய உதவி செஞ்சிருக்கோம்.
முப்பதாயிரம் மக்கள் குடி பெயர்ந்து ஒன்றரைலட்சம் அப்பாவிமக்கள் கொல்லப்பட்டு பிணவாடைல பீடி பிடித்த குடும்பம் ராஜபக்ஷே குடும்பம் இவனுங்கள வீதி வீதியா தெரு நாய அடிக்கறமாதிரி அடிக்கணும் இறந்த நல்லுள்ளங்களின் ஆவி மக்களை வாழ்த்தும். தமிழின துரோகிகள் துடி துடிச்சு சாகனும்
இந்தியா உடன் இணைந்து விட்டால் இலங்கை தப்பிக்க வாய்ப்பு உள்ளது
அழியவேண்டியவர்கள் தப்பிச்செல்கிறார்கள், அப்பாவிமக்கள் அவதி படுகிறார்கள்...
இன்று கோத்தபாயாவிற்கு நாளை .........