Load Image
Advertisement

அதிமுக என்னிடம் தான் உள்ளது: தேர்தல் ஆணையத்திற்கு பன்னீர்செல்வம் கடிதம்

Tamil News
ADVERTISEMENT

சென்னை: ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில், அ.தி.மு.க., தன்னிடம் தான் உள்ளதாக தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பிய கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.


சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளராக பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பன்னீர்செல்வம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஏற்க மறுத்த பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பழனிசாமியை கட்சியில் இருந்து நீக்குவதாக தெரிவித்தார்.


இந்நிலையில், தேர்தல் ஆணையத்திற்கு கொரியர் மூலம் பன்னீர்செல்வம் அனுப்பிய கடிதத்தில் கூறியுள்ளதாவது;ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் என்ற முறையில் கட்சி தன்னிடம் தான் உள்ளது. ஒருங்கிணைப்பாளர் தவிர வேறு யாரும் அதிமுகவை உரிமை கொண்டாட அனுமதிக்க கூடாது எனக்கூறியுள்ளார்.

வங்கிகளுக்கு கடிதம்



சென்னை வானகரத்தில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டார்.
Latest Tamil News

இந்நிலையில், அதிமுக வங்கிக்கணக்குகள் உள்ள வங்கிகளுக்கு பழனிசாமி எழுதிய கடிதத்தில், பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கட்சியின் வரவு செலவு கணக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் தான் கவனிப்பார் எனவும் கூறப்பட்டது.


இதனிடையே, பன்னீர்செல்வம் தரப்பில், நேற்றே வங்கிகளுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது. அந்த கடிதத்தில், பன்னீர்செல்வம் தான் பொருளாளர் எனவும், வங்கிக்கணக்குகளை முடக்கி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

news promo

அனைத்து வசதிகள் கொண்ட உலகளாவிய சந்தையில் சொந்த கடை 50 லட்சம் முதல்!



வாசகர் கருத்து (30)

  • sam - Alaska,யூ.எஸ்.ஏ

    EPS கட்டம் போட்டு தூக்கிட்டாரு OPS. EPS is very smart, same way he did for sakikala, dinakaran etc. OPS ஒரு தத்தி, Even in his own place no one was supporting him. so it was very easy for EPS.

  • JaiRam - New York,யூ.எஸ்.ஏ

    பாத்திரம் என் கையில் இருக்கு என்னை யாரும் ஏமாத்த முடியாது

  • Sethu Thangavelu - Chennai,இந்தியா

    எதிர்த்த அவளவுதான்... நல்ல டி கடை வைத்து பிழைக்க பாரு..... மகனுக்கு ... தபார செட் கழுவ கற்று கொடுத்து அறிவாலயத்துல டி விற்க வேண்டியது தான்

  • Kalyan Singapore - Singapore,சிங்கப்பூர்

    கிழிந்து போன ஒரு அ தி மு க கோடி இவரிடம் இருக்கிறது. அதனால் அ தி மு க தன்னிடம் இருக்கிறது என்று கூறுகிறார் போலும். வெளியேற்றினதும் அனைவருக்கும் பாயசம் வழங்கி புதிய கட்சி தொடங்கிய M.G.R ன் துணிச்சல் யாருக்கு வரும் ?

  • Rajasekaran - Chennai,இந்தியா

    ஓஹோ அவரா இவர் ?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

ஸ்ரீபெரும்புதூரில் சொந்த மனை வாங்க சரியான நேரம் வந்தாச்சு!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்