Load Image
Advertisement

அம்மனுக்கு திரிசூலம் வழங்கிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,

 அம்மனுக்கு திரிசூலம் வழங்கிய தி.மு.க., - எம்.எல்.ஏ.,
ADVERTISEMENT
திருத்தணி : அம்மன் கோவிலில் திரிசூலம் திருடு போனதை தொடர்ந்து, திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தன் செலவில் திரிசூலத்தை நேற்று வழங்கினார்.


@1brதிருத்தணி, சுப்ரமணியம் நகர், அம்மன் கோவில் தெருவில், துர்கை கருமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், பிரதி செவ்வாய் மற்றும் வெள்ளி நாட்களில், அம்மனுக்கு திரளான பெண்கள் பொங்கல் வைத்தும், நெய் விளக்கு ஏற்றியும் வழிபடுவர்.இந்நிலையில், கடந்த 1ம் தேதி நள்ளிரவில், மர்ம நபர்கள் அம்மன் கோவிலின் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணம் மற்றும் திரிசூலத்தையும் திருடிச் சென்றனர்.


இதையடுத்து, திருத்தணி எம்.எல்.ஏ., சந்திரன், சில நாட்களுக்கு முன், திருடு போன அம்மன் கோவிலுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.அப்போது, கோவில் பூசாரி மோகன், திரிசூலம், கண்காணிப்பு கேமரா பொருத்தி தர வேண்டும் என, கோரிக்கை வைத்தார்.


இதையடுத்து, முதற்கட்டமாக எம்.எல்.ஏ., சந்திரன், தன் செலவில், பித்தளையால் ஐந்து அடி உயரமுள்ள திரிசூலத்தை புதிதாக செய்து, நேற்று கோவில் பூசாரியிடம் வழங்கினார். விரைவில் கண்காணிப்பு கேமராவும் பொருத்தி தருகிறேன் என, எம்.எல்.ஏ., மீண்டும் உறுதி கூறினார்.


வாசகர் கருத்து (11)

  • சீனி - Bangalore,இந்தியா

    அறிவாலயத்தில் கட்சித்தலைமை விரைவில் உங்க கண்ணை குத்தப்போகுது... ஹஹஹா...

  • Soumya - Trichy,இந்தியா

    திருடியதையே திருப்பிக்கொடுத்த வள்ளல் ஹாஹாஹா

  • Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா

    இந்துக்களின் வோட்டு வேண்டுமென்றால், தளபதி மு.க. இசுடாலின் முருகன் கோவிலில், விபூதி பூசி, அலகு குத்திக்கொண்டு, தீ மிதித்து, பால் காவடி எடுத்தாலும் எடுப்பார்...

  • raja - Cotonou,பெனின்

    ஹி ஹி ஹி பெரியாரின் பகுத்தறிவு இப்போ திருட்டு திராவிடர்களால் பல்லிளிக்கிறது.....

  • Indhuindian - Chennai,இந்தியா

    அந்த வேலோட விலை என்னன்னு சொல்லிட்டா எவ்வளோ புண்ணியம் சம்பாதிசிட்டார்னு தெரிஞ்சிக்கலாம்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement