Load Image
Advertisement

அ.தி.மு.க., அலுவலகத்தை கைப்பற்றினார் பன்னீர்செல்வம்; வன்முறை: பதட்டம் !

Tamil News
ADVERTISEMENT
சென்னை: பரபரப்பான சூழலில் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் கூடவுள்ள நிலையில் கட்சியின் பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் காலை 8 மணியளவில் புறப்பட்டு சென்றார். இதனையடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சி அலுவலகம் முன்பு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். பலர் காயமுற்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது. கட்சி அலுவலகம் தற்போது பன்னீர்செல்வம் கைக்குள் வந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.


இன்று காலை பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் அதிமுகவில் , சென்னை வானகரத்தில் பொதுக்குழுவில் எதிர்கட்சி தலைவரான பழனிசாமி பங்கேற்றுள்ளார்.


ஆனால் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் வீட்டில் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர் தனது பிரசார வாகனத்தில் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகம் நோக்கி புறப்பட்டுள்ளார். இதனையடுத்து கட்சி அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Latest Tamil News


ஏற்கனவே அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஆதிராஜாராம் தலைமையில் தொண்டர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் அங்கு வந்த நிலையில் இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிலர் காயமுற்றதாக கூறப்படுகிறது. இரு தரப்பினரும் கம்பு மற்றும் கல் மூலம் தாக்கினர். இதனால் பெரும் பதட்டம் நிலவுகிறது.


வாசகர் கருத்து (49)

  • s.sivarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்

    தனித்து விடப்பட்டுள்ள பன்னிர்செல்வத்தை ப.ஜ.க பயன்படுத்திக் கொள்ளவேண்டும்

  • krish - chennai,இந்தியா

    OPS அத்து மீறி, அதிமுக அலுவலகத்தில் அடாவடி செய்தது அநியாயம், அக்கிரமம், அராஜகத்தின் உச்சம். வன்முறை என்றுமே நல்முறை அன்று. சட்டத்தை நம்பி, தீர்வு நாடியவர், சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயலாற்றவேண்டும். இருந்த சில ஆதரவாளர்களையும், இச்செயலால் அவர் இழக்க முற்பட்டுள்ளார். ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு என்பதை தெளிவு படுத்தி உள்ளார் கூடாநட்பு கேடாகவே முடியும் புரிந்தால் சரி.

  • Svs Yaadum oore - தொண்டை நாடு , தமிழக ஒன்றியம் , பாரதம் , ஹிந்துஸ்தான் .,இந்தியா

    தி மு க என்னதான் அழுது உருண்டு அடித்து புரண்டாலும் திராவிடம் தமிழ் நாட்டில் அடியோடு வேரறுத்து முழுமையாக களையப்படும் . இது அண்ணாமலையார் சபதம் ...அறிவாலயம் வேண்டுமானால் கிறிஸ்துவனுங்க கல்லறை தோட்டமாக மாற்றி கொள்ளலாம் ...

  • Anand - chennai,இந்தியா

    இந்த படுதோல்வி நாடகத்திற்கு கதை, திரைக்கதை, வஜனம், இயக்கம் அனைத்தும் ........

  • ThiaguK - Madurai,இந்தியா

    நியாமானவராய் இருந்தால் அராஜகத்தில் எதுக்கு இறங்கணும் ... குண்டர்களை இவருக்கு ஏற்பாடு செய்வது யார் என்று உலகுக்கே தெரியும்.. சட்டப்படி நியாயப்படி இவர் செல்லா காசு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
வருங்காலத்தை
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்

Send Hi to 91505 74441

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்

/
volume_up