வட மாநில தொழிலாளர் ஆதிக்கம்கூடாது என்கிறார் அமைச்சர் வேலு
திருச்சி;''கட்டுமான தொழிலில், வட மாநில தொழிலாளர்கள் ஆதிக்கம் வரக்கூடாது,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசினார்.திருச்சியில், கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பு சார்பில், முதல் மாநில மாநாடு, வாரிய தலைவர் பொன்குமார் தலைமையில் நடைபெற்றது.மாநாட்டில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு பேசியதாவது: பத்து ஆண்டுகளாக கட்டுமான தொழிலாளர் நல வாரியம் செயல்படாமல் இருந்தது. அ.தி.மு.க., ஆட்சியில், 'பேக்கேஜ் சிஸ்டம்' கொண்டு வந்தனர்.தற்போது, அதை ஒழித்து, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்களுக்கு, தனித்தனியாக பணிகள் கொடுக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 192 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, 2 லட்சத்து, 221 கோடி ரூபாய்க்கு வெளிநாட்டு முதலீடு பெறப்பட்டுள்ளது.கட்டுமான தொழிலில், வட மாநில தொழி லாளர்கள் ஆதிக்கம் வரக்கூடாது. தமிழக தொழிலாளர்களுக்கு, வேலை கொடுத்தால் தான், தமிழகத்தின் பொருளாதாரம் முன்னேறும்.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
தமிழ்நாட்டு தொழிலாளர்களிடம், குடித்து விட்டு வேலைக்கு வந்து அடாவடி செய்யக்கூடாது என்று அறிவுறுத்தவும்.