தமிழகத்தில் கோவிட் : தொடர்ந்து 3 வது நாளாக குறைவு: ஒரே நாளில் 2,537 பேர் பாதிப்பு
சென்னை : தமிழகத்தில் கோவிட் தொற்று சற்று குறைந்து இன்று (ஜூலை 10 ம் தேதி) ஒரே நாளில் 2,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் இன்று (ஜூலை 10 ) 34,469 பேருக்கு கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. தமிழகத்தில் 2,533 பேருக்கும் பிரிட்டன் சென்று திரும்பிய 2 பேர் மற்றும் மஹாராஷ்டிரா மற்றும் டில்லி சென்று திரும்பிய தலா ஒருவரையும் சேர்த்து 2,537 பேருக்கு தொற்று உறுதியானது.
தமிழகத்தில் இதுவரை கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,01,529 ஆக அதிகரித்துள்ளது. இன்று 2,560 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் தமிழகத்தில் கோவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34,44,682 ஆக உயர்ந்துள்ளது. இன்று யாரும் கோவிட்டுக்கு பலியாகவில்லை. கோவிட்டால் பலியானோர் எண்ணிக்கை 38,028 ஆக உள்ளது.
சென்னையில் தொற்று பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக காணப்பட்டது. நேற்று (ஜூலை 9 ம் தேதி ) 844 ஆக இருந்த நிலையில் இன்று (ஜூலை 10 ம் தேதி) சென்னையில் 804 ஆக குறைந்து உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 18,819 ஆக உள்ளது.
மாவட்டவாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியல்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஆமா, "நெஞ்சுக்கு நீதி" 50 வது நாளாமே. கொரோனா பயப்படாம என்ன செய்யும்?