Load Image
Advertisement

டிஜிட்டல் இந்தியா திட்டம் மகத்தான வெற்றி: பிரதமர்

Tamil News
ADVERTISEMENT

புதுடில்லி: கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வர முடியாது எனக்கூறியவர்களுக்கு டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடியை கொடுத்துள்ளது என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.


குஜராத்தின் சூரத் நகரில் இயற்கை விவசாயம் தொடர்பான கருத்தரங்கில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக பிரதமர் மோடி பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாடு பல்வேறு இலக்குகளை நோக்கி செயல்பட துவங்கி உள்ளது. வரும் நாட்களில் வர உள்ள மிகப்பெரிய மாற்றத்திற்கு அடித்தளம் ஆக அது இருக்கும். கிராமங்கள் மற்றும் ஏழைகளுக்காக செய்யப்படும் பணிகளுக்கான பொறுப்பு குடிமக்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.


Latest Tamil News
இனி வரும் காலங்களில், உங்களின் முயற்சிகள் மற்றும் அனுபவத்தால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் ஏராளமானவற்றை கற்று கொள்வார்கள் மற்றும் புரிந்து கொள்வார்கள். சூரத் நகரில் இருந்து வெளிப்படும் இயற்கை விவசாய முறை, நாடு முழுவதும் ஒரு முன்மாதிரியாக இருக்கும். கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வருவது எளிதல்ல எனக்கூறியவர்களுக்கு , டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மகத்தான வெற்றி சரியான பதிலடி கொடுத்துள்ளது. கிராமங்களில் மாற்றங்களை கொண்டு வருவதோடு, மாற்றத்தையும் கொண்டு வர முடியும் என்பதை கிராமங்கள் நிரூபித்துள்ளன. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


வாசகர் கருத்து (21)

  • அப்புசாமி -

    முன்னாடியெல்லாம் கேஷா உருவ மட்டுமே முடியும். இப்போ டிஜிட்டல் இந்தியா கீழே கூகுள் பே மூலமே லஞ்சம் வாங்கிட முடியும். டிஜிட்டல் இந்தியா.மாபெரும் வெற்றி.

  • அப்புசாமி -

    இது தொழில் நுட்பத்தின் வெற்றி. ஆத்மநிர்பரா அல்ல.

  • Visu Iyer - chennai,இந்தியா

    ....

  • Visu Iyer - chennai,இந்தியா

    ராஜீவ் காந்தி கொண்டு வந்த டிஜிட்டல் இந்தியா திட்டம்.. காங்கிரஸ் திட்டத்திற்கு இவர் பெருமை சேர்த்துக் கொள்கிறார்... பாஜக இல்லாத பாரதம் படைப்போம் அறிவும் திறமையும் நேர்மையும் கொண்ட பிரதமரை தேர்வு செய்வோம்.. ஓர் அணியில் இருப்போம் உறுதியாக இருப்போம்.

  • mindum vasantham - madurai,இந்தியா

    phone pe gpay india thaan athikam payanpaduthukindranar

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

திருப்போரூர் திருவிழா - இது சொந்தவீடு வாங்கும் பெருவிழா!

Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்