வேலூர்: 75வது சுதந்திர தின விழா கொண்டாடி வரும் வேளையில் நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களை மறக்காமல் நாம் கவுரவிக்க வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டார்.

கவர்னர் பேசியதாவது: தமிழ் பழமையான சக்தி வாழ்ந்த அழகான மொழி. தமிழர்களின் கலாச்சாரம் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் விடுதலைக்கு முக்கிய பங்கு தமிழகம் வகிக்கிறது.
வேலூர் கோட்டையில் நடந்த போராட்டத்தை ஆங்கிலேயர்கள் கலகம் என்று கூறுகின்றனர். ஆனால் இது புரட்சியாகும். வேலூர் சிப்பாய் புரட்சி இந்தியாவின் சுதந்திரத்திற்கான போராட்டத்தின் வித்தாகும். இப்போராட்டத்தில் இந்திய வீரர்கள் நூற்றுக்கானவர்கள் தன்னுடைய உயிரை தியாகம் செய்தனர். அவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வருகின்ற 75வது சுதந்திர தினத்தன்று நாம் சுதந்திரத்துக்காக உயிர்நீத்த அனைவரையும் நினைத்து பார்க்க வேண்டும் .

இந்தியா முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியாவின் இன்ப காலம் எனும் வளர்ச்சியை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இன்னும் 25 ஆண்டுகளுக்கு பின்பு 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது கல்வி பொருளாதாரம் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளில் ஏற்றத்தாழ்வுகள் இல்லாமல் நாம் வளர்ந்திருக்க வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒரு குடும்பம் என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும். அதற்காக பிரதமர் நரேந்திர மோடி திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்.
நாம் கூர்ந்து நோக்கினால் இந்திய சமமாக வளராமல் ஏற்றத்தாழ்வுடன் வளர்ந்துள்ளது இது தமிழகத்திலும் உள்ளது. தமிழகத்தில் கல்வி பல மாவட்டங்களில் பின்தங்கியும் பல மாவட்டங்களில் வளர்ந்து உள்ளது. உலக நாடுகளின் இந்தியாவின் மீதான பார்வை முற்றிலுமாக மாறுபட்டுள்ளது. இந்தியாவை பொருளாதாரத்தில் சூப்பர் பவர் நாடாக வளர்ந்து வரும் நாடாக பிற நாடுகள் நம்மை பார்க்கின்றன. வேலூர் ஒரு வீர பூமி. ஒவ்வொரு நாடுகளுக்கும் பிரதமர் செல்லும் போது அங்கு அவர்கள் பிரதமரை வரவேற்கும் விதைத்து பார்க்கும்போது அனைவருக்கும் தெரியும். உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் மீது மாறுபட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் இருந்து இந்தியாவின் ராணுவத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் தங்களை அர்ப்பணித்து பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு வானமே எல்லை என்ற நிலை உள்ளது எனவே இளைஞர்கள் நாட்டிற்காக பாடுபட வேண்டும். நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட ஒவ்வொரு வீரர்களையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு கவர்னர் பேசினார்.
சிப்பாய் புரட்சி நினைவு தினம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1806ம் ஆண்டு மதராஸ் படைக்கு தளபதியாக இருந்த சர் ஜான் கிரேடேக் என்பவர் , வேலூர் கோடையில் இருந்த இந்திய சிப்பாய்களுக்கு பல்வேறு அடக்கு முறைகளை கையாண்டார். அதில் குறிப்பாக இந்திய சிப்பாய்கள் காதில் கடுக்கன் அணியக்கூடாது ,சமய சின்னங்களை உடலில் அணிய கூடாது,தாடியை அகற்றிவிட்டு மீசையை வைத்துக்கொள்ள வேண்டும். பசுந்தோளால் செய்யப்பட தொப்பிகளை அணிய வேண்டும், மதக்குறிகளை நெற்றியில் இடக் கூடாது. உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைகளை கொண்டு வந்தார். இதனால் இந்திய சிப்பாய்கள் மன உலச்சளுக்கு ஆளாக்கப்பட்டனர். இதன் காரணமாக ஆங்கிலேயர் ஆட்சியை வீழ்த்த வேண்டும் என திட்டமிட்டு வேலூர் கோட்டையில் 1806 ஆண்டு ஜூலை 10ம் நாள் நள்ளிரவில் ஆங்கிலேய வீரர்களை இந்திய வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
அப்போது இருதரப்பினருக்கும் ஏற்பட்ட போரில் 900 க்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த கிளர்ச்சி நாடு முழுவதும் பரவியது ,வேலூர் கோட்டையில் ஏற்பட்ட, இந்த முதல் சிப்பாய் புரட்சியே, நம் நாட்டின் விடுதலைக்கு வித்திட்ட முதல் சம்பவம் என வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. இச்சம்பவம் நினைவாக வேலூர் கோட்டை எதிரே 1998ம் ஆண்டு தமிழக அரசால் நினைவு தூண் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் ஜூலை 10ம் நாள் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.
வாசகர் கருத்து (21)
மிசாவில் சென்றதையே செக்கிழுத்த செம்மல் ரேஞ்சிற்கு பதிவிட்ட மாடல் அரசை மறக்க முடியுமா ஜி
மறந்தாக்கூட பரவாயில்லை. சுதந்திரத்துக்காக பாடுபட்டவர்களை, நேரு போன்றவர்கள் நாட்டை குட்டிச்சுவராக்கிட்டாங்கன்னு திட்டுறாங்களே. அதான் கொடுமை.
வட இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி நாம் நன்கு தெரிந்து வைத்திருக்கிறோம். இனம் நம் தென்னிந்திய வீரர்களைப் பற்றி கேட்டால் வட இந்தியர்கள் யாருக்கும் தெரியாது.
நிச்சயமாக 10 ஜூலையை நினைவுகூறல் அவசியம்....தங்களது வரலாற்று விவரங்கள் சற்று வித்தியாசமாக உள்ளதை உணர்கிறேன்.. ஜான் க்ரட்டொக் 1806 ஆம் ஆண்டில் மார்ச் மாதம் சில மாற்றங்களை (அடக்குமுறைகள் என்று சொல்லமுடியாது) படைவீரர்களின் தோற்றத்திலும் உடையிலும் கொண்டு வந்தார்.. அதாவது மிலிட்டரி யூனிபார்மில் இருக்கும்போது கடைப்பிடிக்க வேண்டியது.. மற்ற நேரத்தில் அவைகளை படை வீரர்கள் அணிந்து கொள்ளலாம். 1) காதில் கடுக்கன் அல்லது காது வளையம்.. அணியக்கூடாது. 2) ஜாதியைக் குறிக்கும் அடையாள மார்க்குகள் இருக்கக்கூடாது... 3) தாடி 'ட்ரிம்' பண்ணப்பட வேண்டும்.. பிற வீரர்களைப்போல....இந்த மூன்று பழக்கங்கள் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக சிப்பாய்களால் கடைப்பிடிக்கப் பட்டது.... நான்காவதாக, புதிய ரூல் சேர்க்கப்பட்டது.... அதாவது சிப்பாய் தொப்பி எடை குறைந்ததாக லைட்டாக இருக்கவேண்டும்.. எந்த மெட்டீரியல் என்பது குறிப்பிடப்படவில்லை.. நிச்சயமாக, பசுவின் தோல் பற்றிய எந்த குறிப்பும் வரலாற்று நூல்களில் இல்லை.. இந்த புதிய விதிகள் ஜாதிக்கும், இந்து மதத்திற்கும் எதிரானது என்று ஒரு சாரார் தவறான செய்தியை பரப்பினர்.. ஏனென்றால் .தொப்பி இந்திய கிறிஸ்தவன் போடுவது போன்ற ஷேப் வடிவம் உள்ளது.. ஆகவே, கிறிஸ்தவ மதமாற்ற நோக்கங்கள், முயற்சிகள் பின்னணியத்தில் உள்ளன என செய்தி பரப்பினர் .....எதிர்ப்பு கிளம்பியது....ஜூலை 10 தேதியில் அதிகாலை 3 மணிக்கு உள் போர் மூண்டது.. கண்ணில்பட்ட வெள்ளையர்களை சுட்டுத்தள்ளுங்கள் என்ற கட்டளை கிளர்ச்சியாளர்களால் கொடுக்கப்பட்டது.. இறுதியில் மிலிட்டரி நிர்வாகம் கிளர்ச்சியை அடக்கியது.. படைவீரர்கள் 115 பேர் கொல்லப்பட்டனர்....76 பேர் காயமுற்றனர்... 15 மிலிட்டரி ஆபீசர்கள் கொல்லப்பட்டனர்.. சிவிலியன் சாவு பற்றி தெரியவில்லை..
இது மாதிரி விழாவுக்கு கூப்புட்டா தலைமை தாங்கி இது மாதிரி பேசுவாங்க. இறங்கிப் போனதும் இவிங்கதான் முதலில் மறப்பாங்க. அடுத்த விழாவிற்கு ஞாபகம் வந்துரும்.