Load Image
Advertisement

காவிரி ஆணைய கூட்டம்; அதிகாரிகளுக்கு புது உத்தரவு

 காவிரி ஆணைய கூட்டம்;  அதிகாரிகளுக்கு புது உத்தரவு
ADVERTISEMENT


சென்னை : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடர்பாக, அதிகாரிகளுக்கு அரசு புது உத்தரவு பிறப்பித்துள்ளது.


தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். இந்த நீர் முறையாக திறக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுக்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மத்திய அரசு அமைத்து உள்ளது.



இதில், மத்திய நீர்வள ஆணையம், தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநில நீர் வளத் துறை அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இதற்கிடையே, காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில், புதிய அணை கட்டும் முயற்சியில், கர்நாடக அரசு இறங்கியுள்ளது. இதற்கு தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Latest Tamil News

தமிழகத்தின் எதிர்ப்பால், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்று முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் இக்கூட்டத்தை நடத்த, ஏற்பாடு நடந்து வருகிறது. மேகதாது அணை குறித்த விவாதம் நிகழ்ச்சி நிரலில் இடம் பெறும் வாய்ப்புள்ளது. எனவே, அணையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, இக்கூட்டத்தில் எடுத்துரைப்பதற்காக, தமிழக அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.



இந்நிலையில், நிகழ்ச்சி நிரலில் மேகதாது அணை பற்றிய விவாதம் நடக்கும் என கூறப்பட்டிருந்ததாலே, ஆணைய கூட்டத்தை புறக்கணிக்கும்படி, அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து (7)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    கூட்டத்தில் சென்று தங்கள் பாயிண்டை கூறி, தடுக்க நீதிமன்றத்தின் உத்தரவை வைத்து எதிர்ப்பைத் தெரிவிக்காமல், புறக்கணித்தால் நஷ்டம் மாநிலத்துக்குத்தானே 'ஏரி மேல் கோபம் கொண்டு ………' என்பதுபோல் இருக்கிறது இதுதான் மைய அரசுடன் இணக்கமாக இருக்கும் 'மாடல்' கவர்னர் கொடுத்த கோப்புகளை கிளம்பினால் என்ற பயம் சாதாரண கனமா மடியில்

  • Sriniv - India,இந்தியா

    சரியான முடிவு. அண்டை மாநிலம் உச்ச நீதி மன்றத்தை மதிக்காமல் இருந்து வருகிறது . இந்த அணை கட்ட உரிமை இல்லை என்று தெரிந்தும், வேண்டும் என்றே புது பிரச்னையை உருவாக்கிறார்கள். தமிழ் நாடு இதை அனுமதிக்கவே கூடாது .

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    கட்டாந்தரையில் அணை கட்ட முடியாது... ஆகையால் நீயும் படுக்கக்கூடாது... நானும் கூட படுக்க மாட்டேன்....

  • அப்புசாமி -

    தவிர்க்க முடியாத காரணங்களால் கூடுவதை ஒத்தி வெச்சாராம் தலைவர். தண்டச் சம்பளம்.

  • John Miller - Hamilton,பெர்முடா

    இன்னும் ஜுன் மாதத்திற்கான தண்ணீரைத்த தறவில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement