அனுமதி
ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., முன்னாள் பிரதிநிதி மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலரான சந்திரசேகர், ஈரோடு, கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், 'நம் பள்ளியில் முஸ்லிம் குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர். அவர்களுக்கு மதியம், 10 நிமிடம் தொழுகை நடத்த அனுமதி வழங்க வேண்டும். 'இதை, மாணவியரின் பெற்றோர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்' என, கூறியுள்ளார்.அப்பள்ளி நிர்வாகம் அனுமதி வழங்க வில்லை.
இருப்பினும், இக்கடிதம் வழங்கப்பட்டதை அறிந்து, பல்வேறு தரப்பினர், 'மதச்சார்பின்மையை பேசும் தி.மு.க.,வினர், ஹிந்துக்களை புறக்கணிக்கின்றனர்' என, புகார் தெரிவித்தனர். இந் நிலையில், ஈரோடு மாவட்ட ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ஜெகதீசன் தலைமையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர்.
கந்த சஷ்டி கவசம்
மனுவில், 'ஈரோடு, கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் பள்ளியில், முஸ்லிம் மாணவியர் அதிகம் படிப்பதால், மதியம், 10 நிமிடம் தொழுகை நடத்த அனுமதிக்குமாறு, தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகர் மனு வழங்கியதை அறிந்தேன்.'இக்கடிதம், பள்ளி தலைமை ஆசிரியருக்கு வழங்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அப்படி அனுப்பி இருந்தால், தலைமை ஆசிரியரின் முடிவு என்ன என்பதை தெளிவுபடுத்த வேண்டும். 'ஒருவேளை தொழுகைக்கு அனுமதி வழங்கினால், அதே பள்ளியில் படிக்கும் ஹிந்து மாணவியர் நலனுக்காக, தினமும், 15 நிமிடம் 'ஹயக்ரீவர்' மந்திரம், கந்த சஷ்டி கவசம் பாடவும், படிக்கவும் அனுமதிக்க வேண்டும்' என, கூறி இருந்தனர்.
வாசகர் கருத்து (8)
//... பிரிவினைக்கு பின் அவர்களை ...// நல்லவர்களும் உள்ளனர். ஆனால் வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மை வோட்டிற்காக திராவிட கட்சியினர் இப்படி செய்கின்றனர். இதுதான் "திராவிட மாடல்"
ஈரோடு: பள்ளியில் முஸ்லிம் குழந்தைகள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கோரி, தி.மு.க., பிரமுகர் கடிதம் கொடுத்ததால், ஹிந்து குழந்தைகள் மந்திரம் படிக்க நேரம் ஒதுக்கக் கோரி, ஹிந்து முன்னணியினர், கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கினர். இந்த சந்திரசேகர் என்ன...? பின் விளைவுகள் எதையும் பற்றி கொஞ்சம் கூட யோசிக்காமல் எப்படி இவ்வாறு ஈரோடு, கருங்கல்பாளையம் மாநகராட்சி மகளிர் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஏட்டிக்கு போட்டி இதுவே புலப்பபோச்சு அரேபிய, ஆரிய, இஸ்ரேலிய அடிமைகளின் சந்தியில் சிக்கி சாவது பாமர ஹிந்துக்களே இந்த பாமர மக்களை வைத்து தான் அனானித்து கட்சிகளும் அரசியில் செய்கின்றனர் ஈது ஏங்கே பொய் முடியுமோ
கொஞ்சம் கொஞ்சமாக இஸ்லாமிய நாடாக மாறுகிறது வேதனை. எல்லாவற்றுக்கும் மூல காரணம் பிரிவினைக்கு பின் அவர்களை இங்கு தங்க விட்டு சலுகை அளித்த ஹிந்துதுரோகிகள்
ஆளப்போகும் தொழில்நுட்பங்கள் எவை?
தினமலர் வழிகாட்டி 2023 - அனுமதி இலவசம்
Send Hi to 91505 74441
என்னங்கடா நடக்குது இந்தியாவில? கூடிய சீக்கிரம் இந்துக்களை ஒழிச்சு கட்டிடுவாங்களோ?