ADVERTISEMENT
சென்னை: நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று (ஜூலை 08) வெளியாக உள்ள நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக செய்தி பரவியது. ஆனால் அவரின் மேலாளர் சூர்ய நாராயணன் இதை மறுத்துள்ளார்.
விக்ரமின் மேலாளர் கூறியிருப்பதாவது : விக்ரமுக்கு லேசான மார்பு அசவுகரியம் இருந்தது. அதற்காக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை. இது தொடர்பான வதந்திகளைக் கேட்டு வேதனை அடைகிறோம். இந்த நேரத்தில் அவருக்கும் குடும்பத்திற்கும் தேவையான தனியுரிமையை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். விக்ரம் தற்போது நலமாக இருக்கிறார். இன்னும் ஒரிரு நாளில் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இந்த அறிக்கை பொய்யான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்புகிறோம்'' என்றார்.
இதே கருத்தினை காவேரி மருத்துவமனை நிர்வாகமும் வெளியிட்டுள்ளது.
வாசகர் கருத்து (3)
இது தான் இந்தியாவின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் செய்தி
இருப்பதை வைத்துக்கொண்டு இல்லாததை கண் முன் கொண்டுவருவதுதான் நடிப்பு... திருவருட்ச்செல்வர் சிவாஜி ஐயா போல.... அதை விடுத்து உடம்பை நிஜமாகவே ஏத்தரேன், இறக்குறேன் என்று கிளம்பினால் உடல் தன் வேலைய காட்டிடும்... சீயான் நலமாக ஈசன் அருளட்டும்....
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சம்பந்தி சரி இல்லை என்றால் இந்த பிரச்சினைகள் வரும்.