திருவாரூர்: அதிமுக முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ரூ.58 கோடிக்கும் மேல் சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், ரெய்டு நடந்து வருகிறது.
இவரது தொடர்பான சென்னை, தஞ்சை, திருவாரூர், திருச்சி, மன்னார்குடி, கோவை, உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு படையினர் ரெய்டு நடத்துகின்றனர். காமராஜின் வீடு, அலுவலகம் மற்றும் அவருக்கு சொந்தமான 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடக்கிறது.
இவரது மகன்கள் இன்பன், இனியன், மற்றும் உறவினர்கள் சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது வீடுகள் மற்றும் அவருக்கு தொடர்பான அலுவலகங்கள், காமராஜின் மைத்துனர் ஆர்ஜி குமார் வீடு, காமராஜின் மனைவியின் தங்கை ஆண்டாள் வீடு, வழக்கறிஞர் உதயகுமார் வீடு, ராஜாளி குடிகாடு லோக அறிவழகன் வீடு, மூவாநல்லூர் அறிவழகன் வீடு, காமராஜின் நண்பர் சம்பத்குமாரின் வீடு, மன்னார்குடியில் தியாகு வீடு, முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் டி.என்.பாஸ்கரன் வீடு, பைங்காநாடு ஜெயலலிதா மாவட்ட பேரவை பொருளாளர் ராதாகிருஷ்ணன் வீடுகளில் சோதனை நடக்கிறது.
![Latest Tamil News]()
இந்த ரெய்டுக்கு முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் காழ்ப்புணர்ச்சி காரணமாக ரெய்டு நடத்தப்படுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்கூட்டியே தகவல் வெளியானதா?
முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவர் தொடர்புடையவர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள இருப்பது நேற்றே (ஜூலை 7) காமராஜ்க்கு தெரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரிகள் சோதனை வரும் தகவல் முன்கூட்டியே தெரியவந்ததால், இன்று சென்னை கிளம்புவதற்காக காமராஜ் முன்பதிவு செய்திருந்த விமான டிக்கெட்டை அவர் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பழனிசாமி அமைச்சரவையில் எல்லாரும் கொள்ளையர்கள் தான்.அதனால் தான் பழனிக்கு சப்போர்ட் செத்தால் பின்னால் பார்த்து கொள்ளலாம் என்று கணக்கு போட்டு தன பன்னிர்செல்வத்தை எதிர்க்கிறார்கள். சில மந்திரிகள் இப்படி ஆனால் ஜெயக்குமார் ஒருபடி மேலே பொய் போக்ஸோ சட்டத்தில் மாட்ட போகிறான். இரண்டு பெண்கள் ரெடியாக உள்ளனர் கேஸ் கொடுக்க. அப்புறம் என்ன விசாரணை இன்றி உள்ளே போக போகிறான்.எல்லாமே பன்னிரு செல்வத்திற்கு தெரியும் ஒன்று ஒன்றாக வெளிவரும். அந்த பதினாறு மந்திரிகளும் கரை வெட்டி இல்லாமல் கோடி வாய்த்த கார் இல்லாம போகும் பொது தான் தெரியும்.