ADVERTISEMENT
உயில் எழுதி வைத்து விடுவாரோ...!
'தெலுங்கானாவையே தனக்கு சொந்தமாக்க, பட்டா போடப் போகிறார் போலிருக்கிறது...' என்று அம்மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான சந்திரசேகர ராவை கிண்டலடிக்கின்றனர் பொதுமக்கள்.
தெலுங்கானா தனி மாநிலம் அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரசேகர ராவ் என்பதில், யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.
தனி மாநிலம் உருவாகி, முதல்வர் நாற்காலியில் அமர்ந்த பின், அவரது நடவடிக்கைகள் முற்றிலும் மாறி விட்டன. சர்வாதிகார போக்கு, அவரிடம் தலைதுாக்கி விட்டது. தெலுங்கானாவில், தங்கள் கட்சியை தவிர, வேறு எந்த கட்சியும் அரசியல் செய்யக்கூடாது என்ற அவரது எண்ணம், இப்போது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
மாநிலம் முழுதும் எல்லா மாவட்டங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதிக்கு அலுவலகம் கட்ட, குறைந்த விலையில் அரசு நிலங்களை வழங்க, அவரது அரசு உத்தரவிட்டுள்ளது. ஹைதராபாத் போன்ற மாவட்டங்களில், ஏற்கனவே இதற்கான நடவடிக்கைகள் துவங்கி விட்டன.
இந்த விவகாரம் தெலுங்கானா மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. 'இன்னும் கொஞ்சம் விட்டால், ஒட்டுமொத்த தெலுங்கானா மாநிலத்தையும், தன் குடும்பத்துக்கு உயில் எழுதி வைத்து விடுவார் போலிருக்கிறதே...' என்று எரிச்சலுடன் கூறுகின்றனர், அவர்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!