Load Image
dinamalar telegram
Advertisement

மத்திய அமைச்சர் முக்தர் அப்பாஸ் ராஜினாமா: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டி?

Tamil News
ADVERTISEMENT
புதுடில்லி: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்தார். அவர் துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., சார்பில் களமிறக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.மற்றொரு மத்திய அமைச்சர் ஆர்சிபி சிங்கும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வியின் ராஜ்யசபா எம்.பி., பதவி நாளையுடன் முடிவுக்கு வருகிறது. இதேபோல, தே.ஜ., கூட்டணியில் அங்கம் வகிக்கும் பீஹாரைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் ஆர்.சி.பி.சிங், மத்திய அமைச்சரவையில் உருக்குத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். இவரது ராஜ்யசபா எம்.பி., பதவியும் நாளையுடன் முடிவுக்கு வருகிறது.

இரு அமைச்சர்களுமே ராஜ்யசபா எம்.பி.,க்களாக மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை. எம்.பி., பதவி முடிவுக்கு வந்தாலும், ஆறு மாத காலத்துக்கு அவர்கள் அமைச்சர்களாக தொடர முடியும். ஆறு மாத காலத்துக்குள் அவர்கள் எம்.பி., ஆக்கப்படவில்லை எனில், மத்திய அமைச்சர் பதவியை இழக்க நேரிடும். முக்தர் அப்பாஸ் நக்வி துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது அல்லது ஏதாவது ஒரு மாநில கவர்னராக நியமிக்கப்படலாம்.Latest Tamil News
இந்நிலையில், முக்தர் அப்பாஸ் நக்வி, மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அவர், பிரதமர் மோடியை சந்தித்த பின்னர், பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நக்வியின் பணியை பிரதமர் பாராட்டி உள்ளார்.

விலகல்Latest Tamil Newsஆர்.சி.பி.சிங்கை பொறுத்தவரை, அவர் எந்த நேரத்திலும் பா.ஜ.,வில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே, ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ்குமாரால் அவர் புறக்கணிக்கப்படுவதாக அரசியல் வட்டாரங்கள் கூறின. இச்சூழ்நிலையில் அவரும் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.வாசகர் கருத்து (20)

 • sankaseshan - mumbai,இந்தியா

  மதராசாவில் படித்தால் அந்த சமுதாயம் முன்னேறி விட்டதா

 • Srprd -

  Union Ministers are resigning their posts, so how will there be continuity in the work? Seems the Govt is not bothered.

 • RAMAKRISHAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

  தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்திரராஜன், சிதம்பரம் கோவிலில் எனக்கு எந்த அவமரியாதையும் ஏற்படவில்லை. ஆயிரங்கால் மண்டபப் படியில் அமரக் கூடாது என்று ஒரு தீட்சிதர் சொன்னார். அதற்கு நான் இங்கே தான் அமர்வேன் என்று சொன்னேன். பின்னர் அவர் சென்றுவிட்டார். மற்ற அனைத்து தீட்சிதர்களும் என்னிடம் வந்து இறைவன் பிரசாதத்தை வழங்கினர். அந்த தீட்சிதர் கூறியதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இதனால் அவமரியாதை என்ற செய்தி தவறானது என்று விளக்கமளித்தார். அனால் அவமதிக்க வில்லை என்னடா இது ஒரு கவர்னர் உட்காரக்கூடாதாம் , வெள்ளையா இருந்தா தான் மதிப்பார்கள்

 • செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ

  இத பார்த்தாவது விடியல் ஏதாவது பாய்க்கு துணை முதல்வர் பதவி தரூமா

 • SUBBU,MADURAI -

  வெங்கையா நாயுடு சென்னையில் கருணாநிதியின் சிலையை திறக்க வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை அவருக்கே மீண்டும் துணை ஜனாதிபதி பதவி கிடைத்திருக்கும். வெங்கையா நாயுடு கட்டுமரத்தின் சிலையை திறந்து வைக்கப் போய் தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார்.செத்தும் கொடுத்தார் சீதக்காதி என கேள்விப் பட்ருக்கோம்.ஆனால் செத்தும் கெடுத்தார்கட்டுமரம் என்பதை வெங்கையா நாயுடு இந்நேரம் புரிந்து கொண்டிருப்பார்.பாவம் வெங்கி இனிமேல் தமிழ் நாட்டு பக்கமே தலை வச்சு கூட படுக்க மாட்டார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement