ADVERTISEMENT
ராமேஸ்வரம்: 'இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பெண் குழந்தைகள் கடத்தல் அதிகரித்துள்ளதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர்' என, ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடிக்கு தப்பி வந்த அகதி வேதனை தெரிவித்தனர்.
இலங்கை யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 18 மாதம் குழந்தை துவங்கி, 42 வயதுள்ள ஆண், பெண் எட்டு பேர், கள்ளப்படகில் புறப்பட்டு, நேற்று முன்தினம் நள்ளிரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை வந்தனர்.இவர்களிடம் 'மரைன்' போலீசார் விசாரணை நடத்திய பின், மண்டபம் முகாமிற்கு அனுப்பினர்.
இக்குழந்தைகளை யார் கடத்தியது; அவர்களின் கதி என்ன எனத் தெரியாமல் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.இதுபோல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வறுமை நிலையை பயன்படுத்தி பெண் குழந்தைகளை பல இடங்களில் மர்ம கும்பல் கடத்தி வருகிறது.இதனால் இலங்கையில் வாழ முடியாத சூழலில் ஏராளமானோர் தவிக்கின்றனர். அவர்கள் அகதியாக தமிழகம் வர காத்திருக்கின்றனர்.இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.

இலங்கை நிலவரம் குறித்து அகதி பெண் சசிகலா கூறியது:இலங்கையில் இருவேளை உணவுக்கு திண்டாட்டமாக உள்ளது. பலர் வருவாய் இன்றி ஒரு வேளை உணவுகூட கிடைக்காமல் தவிக்கின்றனர். இச்சூழலில் 6 - 8 வயதுள்ள பெண் குழந்தைகள் மூன்று பேரை மர்ம கும்பல் கடத்தி சென்றது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.

இக்குழந்தைகளை யார் கடத்தியது; அவர்களின் கதி என்ன எனத் தெரியாமல் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.இதுபோல் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வறுமை நிலையை பயன்படுத்தி பெண் குழந்தைகளை பல இடங்களில் மர்ம கும்பல் கடத்தி வருகிறது.இதனால் இலங்கையில் வாழ முடியாத சூழலில் ஏராளமானோர் தவிக்கின்றனர். அவர்கள் அகதியாக தமிழகம் வர காத்திருக்கின்றனர்.இவ்வாறு அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து (8)
இந்த இலங்கை அகதிகள் வந்து சேர்ந்த இடம் தமிழகம். அங்குதான் பிரச்சினையே.. ஆம், இங்கு மட்டும் குழந்தை கடத்தல் இல்லையா? இங்கு மட்டும் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு கிடைத்துவிடுமா? சந்தேகம்தான்...
சூப்பர்... முள்ளிவாய்க்கால் தமிழர்களின் சாபம் இப்போது கேட்க தொடங்கிவிட்டது....இதே போல் திருட்டு திராவிட ஓங்கோல் கட்டுமர குடும்பத்தையும் ஒருநாள் கேட்கும்......
கடத்தல் சிறுநீரகத்துக்காக இருக்கலாம் ... இலங்கைத் தமிழர்களுக்காகப் பொங்குபவர்கள் எந்த பொந்தில் இருக்கிறார்கள் ????
ஆயிரக்கணக்கான ஈழச்சிறுமிகளைக் கற்பழித்துக் கொன்றதால் இலங்கை இன்று அழிவின் விளிம்பில் நிற்கிறது.தெய்வம் நின்று கொல்லும்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இந்த பெண் குழந்தைகளை விலைக்கு வாங்குவது .. அரேபியர்கள் .. பரம்பரை வழக்கம் போலும்