ADVERTISEMENT
சென்னை : காங்., - எம்.பி.,யின், 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேனாவை திருடிய நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலில், எதிர்க்கட்சி வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். ஆதரவு திரட்டுவதற்காக, இரு தினங்களுக்கு முன், அவர் சென்னைக்கு வந்தார்.கிண்டியில் உள்ள, ஐ.டி.சி., கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி., விஜய் வசந்த் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
அப்போது, விஜய் வசந்த் சட்டை பையில் இருந்த, 1.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'மான்ட்பிளாங்க்' பேனாவை, யாரோ திருடி விட்டனர். இந்த பேனாவை, மறைந்த தந்தையும், தொழில் அதிபருமான வசந்தகுமாரின் நினைவாக, விஜய் வசந்த் பயன்படுத்தி வந்துள்ளர்.இந்த பேனா முனை, தங்கத்தால் செய்யப்பட்டது; அதில், வைரமும் உள்ளது.
விலை உயர்ந்த பேனா திருடு போனது குறித்து, விஜய் வசந்த் சார்பில், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், பேனாவை திருடியவரை தேடி வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பேனாவே ₹1.5 லட்சம்னா? காந்தி பென்சில் தேடிய கதை போல.. காங்கிரஸ் எப்போதுமே மிராசுதார் கட்சிதான். பல கட்சியினர் கூட்டமாக வரும் இடத்தில் வறட்டு ஜம்பதுக்கு ஏன் விலை உயர்ந்த பேனாவை எடுத்து செல்ல வேண்டும்? காங்கிரஸ் இன்று இருக்கும் நிலைமைக்கு இந்த பந்தா தேவையா? எளிமையை பெரிப்பா குமரி ஆனந்தனிடமோ அக்கா தமிழிசையிடமோ கற்று கொள்ளுங்கள்.