Load Image
dinamalar telegram
Advertisement

பா.ஜ., குரலில் பேசும் பரிதாபம்: ராகுல் மீது மார்க்சிஸ்ட் கோபம்

Tamil News
ADVERTISEMENT
சென்னை : பா.ஜ., குரலில் பேசும் பரிதாப நிலைக்கு, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தள்ளப்பட்டுள்ளதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் காங்கிரசுடன் கூட்டணி, கேரளத்தில் காங்கிரசை எதிர்த்து போட்டி என இருந்தாலும், காங்கிரஸ் -- கம்யூனிஸ்ட் இடையே பெரிய அளவில் மோதல் இல்லாமல் இருந்தது. ஆனால், 2019 லோக்சபா தேர்தலில், கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் போட்டியிட்டதும், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் வலுக்க துவங்கியது.

'தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்த்து அரசியல் நடத்தும் ராகுல், பா.ஜ., வெல்லவே முடியாத கேரளாவில் போட்டியிடுவது ஏன்?' என, அப்போதே கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்தார். கடந்த, 2021 சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் கூட்டணி, அங்கு மீண்டும் ஆட்சியை பிடித்ததும், இரு கட்சிகளும் எலியும், பூனையும் போல மாறின.

சமீபத்தில் வயநாட்டில் உள்ள, ராகுலின் எம்.பி., தொகுதி அலுவலகத்தை, மார்க்சிஸ்ட் மாணவர் அமைப்பினர் அடித்து நொறுக்கினர். அதைத் தொடர்ந்து வயநாடு வந்த ராகுல், கேரள கம்யூனிஸ்ட் அரசையும், முதல்வர் பினராயி விஜயனையும், கடுமையாக விமர்சித்தார்.
Latest Tamil News அதற்கு பதிலடியாக, ராமகிருஷ்ணன் நேற்று வெளியிட்ட அறிக்கை: பா.ஜ.,வால் ஒரு தொகுதியைக் கூட வெல்ல முடியாத கேரளாவுக்கு சென்ற ராகுல், பா.ஜ.,வுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தொடர்பு உள்ளதாக பேசியிருப்பது வினோதம். ஆர்.எஸ்.எஸ்., ஆதரவில் பணியில் சேர்ந்த பின், கேரள முதல்வர் பினராயி விஜயன் பற்றி அவதுாறு கிளப்ப தொடங்கியுள்ள பெண்ணின் கருத்துக்களை, ராகுல் எதிரொலித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளை மிரட்ட, மத்திய பா.ஜ., அரசு ஆயுதமாக பயன்படுத்தும் அமலாக்கத் துறையை, எதிர்க்கட்சி ஆளும் மாநிலமான கேரள முதல்வர் மீது ஏவ வேண்டும் என, காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. அதிகாரத்திற்காக, பா.ஜ.,வின் குரலில் பேசத் தயங்காத காங்கிரஸ் கட்சியின் பரிதாப நிலையையே, இது காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (16)

  • Kutti Ravi - coimbatore,ரூவான்டா

    தகரம் கண்பிடிக்கும் முன்பே உண்டியலை கண்டுபிடித்த ............அவர்களே

  • Tc Raman - Kanchipuram,இந்தியா

    ஆமாம் . இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகலைப்போல எப்போதும் சீன குரலிலேயே பேச வேண்டும் .

  • sankaseshan - mumbai,இந்தியா

    தமிழ் நாட்டில் தனித்து நின்று ஜெயிக்க முடியாத ராமக்ரிஷன் இப்படி பேசறதுக்கு வெட்கமாக இல்லையா

    • vadivelu - thenkaasi,இந்தியா

      தமிழக கம்யூனிஸ்டுகள் தி.க., காரர்கள், அங்கே தேர்தலில் நிற்க முடியாது என்பதால் கம்யூனிஸ்டு கட்சியை ஆக்ரமித்துள்ளனர்.

  • jayvee - chennai,இந்தியா

    ராவுல் வின்சிக்கும் ஸ்வாமிக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை.. முன்னவர் மக்கு பின்னவர் அதி புத்திசாலி.. ஒற்றுமை.. இருவருமே தான் சார்ந்திருக்கும் கட்சிக்கு மூடுவிழா நடத்த முனைபவர்கள்

  • r.sundaram - tirunelveli,இந்தியா

    நீங்கள் திமுக குரலில் பேசுவது இல்லையா என்ன? தேர்தலுக்கு பணம் வாங்கியபின் உங்கள் குரல், திமுக குரல் போல், அதிகமாகவே கேட்க்கிறதே? திமுகவுடன் கூட்டணி இல்லாமல் நீங்கள் எத்தனை இடத்தை தமிழகத்தில் பெற முடியும்?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்