நம் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டி:'இஸ்ரோ' எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு துறையில் விஞ்ஞானியாக பல காலம் பணியாற்றியவர், நம்பி நாராயணன். அவரது தேச பக்தியில் சந்தேகம் ஏற்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. நம்பி நாராயணன், சட்ட ரீதியில் போராடி, அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். அப்படிப்பட்ட தேச பக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து, எடுக்கப்பட்ட படம் தான், ராக்கெட்ரி! மாதவன் நடித்து, இயக்கியுள்ளார்.
பிடிக்கவில்லையா?
அந்த படம் பல மொழிகளிலும் வெளியாகியுள்ளது. படத்தில், நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் வரும் மாதவன், பேட்டி தரும் காட்சி உண்டு. பேட்டி எடுப்பவர், உள்ளூர் மொழியில் பிரபலமான நடிகராக இருப்பவர். பேட்டி முடிந்ததும், நம்பி நாராயணன், 'ஜெய் ஹிந்த்' என்று கூறி முடிப்பார்.
ஹிந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக் கானும் பதிலுக்கு, 'ஜெய் ஹிந்த்' என கூறுவார். தமிழ் மொழியில், நடிகர் சூர்யா பேட்டி எடுப்பார். ஆனால், 'ஜெய் ஹிந்த்' என்று கூறி பேட்டியை முடிக்க மாட்டார். இது என்ன முரண்பாடு என புரியவில்லை. சூர்யாவுக்கு, 'ஜெய் ஹிந்த்' பிடிக்கவில்லையா? அல்லது பட காட்சி அமைப்பே அப்படித் தான் எடுக்கப்பட்டுள்ளதா?
சூர்யா, ஜெய் ஹிந்த் அதாவது இந்தியா வாழ்க என்ற வார்த்தையை கூற மாட்டார் என்றால், அது என்ன கொச்சை வார்த்தையா? ஒரு வேளை, அவருக்கு ஹிந்தி தெரியாததால், அவர் அந்த வார்த்தையை சொல்ல மறந்திருந்தாலோ, மறுத்திருந்தாலோ ஹிந்தி மொழியை இலவசமாக கற்று கொடுக்க ஏற்பாடு செய்கிறேன்.
சரியான விளக்கம்
அப்படியில்லாமல், அவர் அந்த வார்த்தையை சொல்லவே மாட்டேன் என்று அடம் பிடித்திருந்தால், அவருக்கு இந்தியாவில் என்ன வேலை? தேசப் பற்று இல்லாதவர், இந்தியாவை விட்டு வேறு நாட்டுக்கு சென்று விடலாம். அதற்கு என்ன தேவையோ, அதையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன். சூர்யா சரியான விளக்கத்தை கொடுக்க வேண்டும். இல்லையென்றால், அவர் திட்டமிட்டே இந்த காரியத்தை செய்தார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (169)
பிழைக்க வழியில்லாத கூத்தாடிகள் பாஜகவில் இணைவது ஏனோ...
இயக்குனர் என்ன எப்படி செய்ய சொல்கிராரோ அவரது சொல்படி செய்வதே நடிகரின் வேலை நடிகர் இயக்குனர் சொன்னபடி செய்யவில்லையென்றால் நடிகரை மாற்றலாம் காட்சிக்கு இயக்குனரே முழு பொறுப்பு நடிகர் அவர் இஷ்ட்டத்துக்கு எதையாவது உளறினால் இயக்குனர் அதை வெட்டியெறியலாம் மாதவன் படத்தின் இயக்குனர் மட்டுமல்ல தயாரிப்பாளரும் கூட அவரிடம் இந்த இலக்கணமான கேள்விகளைக் கேட்டு அவரை சர்ச்சையில் மாட்டிவிடவேண்டியதுதானே?
யம்மா மோகன் லாசரஸ் கூட சேர்ந்து கிறிஸ்துவ மத பிரச்சாரம் பண்ணும் பொண்டாட்டியோட அக்கா நக்மா கோச்சிக்கிட்டாங்கன்னா அவருக்கு படம் எடுக்கிறதுக்கு மிஷனரி பணம் கிடைக்காது ன்னு சூர்யாவுக்கு நல்லா தெரியும். அவர் கூடிய சீக்கிரம் இத்தாலி மொழியில் ஆமென் வேணா சொல்லுவாரே தவிர ஜெய் ஹிந்த் எல்லாம் சொல்ல மாட்டார் மா.
எல்லாம் பிட்சை அரசுமேல் இருக்கும் பயம்தான். சினிமாதுறை அவர்கள் கையில்தானே இருக்கிறது
'ஜெய் ஹிந்த்' என்கிற வடமொழி சொற்களை சொல்ல அவசியம் இல்லை... 'வாழ்க இந்தியா' என்றாலே போதும்