Load Image
dinamalar telegram
Advertisement

திரவுபதி முர்முவை விமர்சிக்க தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் தடை

Tamil News
ADVERTISEMENT
சென்னை: பா.ஜ., கூட்டணி ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்முவை விமர்சிக்க கூடாது என, தி.மு.க., நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் தடை போட்டுள்ள தகவல் தெரிய வந்துள்ளது.

வரும் 18-ம் தேதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணி சார்பில், பழங்குடியினத்தை சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர்.


சிக்கல்
சமூக நீதி பேசும் தி.மு.க., தலைமை, பழங்குடியின வேட்பாளரை ஆதரிக்காமல், யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் விமர்சித்துள்ளன. சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை பேசும் தி.மு.க., தலைமை, பழங்குடியின பெண் வேட்பாளரை ஆதரிக்காமல், உயர் ஜாதி வேட்பாளரை ஆதரிப்பதாக, சமூக ஊடகங்களிலும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இதனால், தி.மு.க.,வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Latest Tamil News

ஒற்றுமை
ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு திரட்டுவதற்காக, யஷ்வந்த் சின்ஹா, ஜூன் 30-ம் தேதி, சென்னை வந்தார். அறிவாலயத்தில் நடந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சின்ஹாவை ஆதரித்து, ஓரிரு வார்த்தைகளோடு முடித்து கொண்டார்.

சின்ஹாவை ஏன் ஆதரிக்கிறோம் என்பதைகூட பேசாமல், தி.மு.க., - எம்.பி., சிவாவிடம் விட்டுவிட்டார். அவரும், பா.ஜ., கூட்டணி வேட்பாளர் முர்முவை விமர்சிக்காமல், 'எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை காட்டவே சின்ஹாவை நிறுத்தியுள்ளோம்' என்பதோடு நிறுத்திக் கொண்டார்.

இது தொடர்பாக, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:ஜனாதிபதி தேர்தலில் முர்மு வெற்றி உறுதி. அதன்பின், ஏதாவது பிரச்னை, கோரிக்கை என்றால் அவரை தான் சந்திக்க வேண்டும். அதுமட்டுமல்லாது முர்மு, பழங்குடியின பெண். அவரை எதிர்ப்பது பிற்காலத்தில் வேறு விதமாக பேசப்படும் வாய்ப்புள்ளது.


கண்டிப்பு
எனவே தான், 'சின்ஹாவை ஆதரித்து பேசுங்கள்; ஆனால், திரவுபதி முர்முவை விமர்சித்து, ஒரு வார்த்தையும் பேசக் கூடாது' என, கட்சி நிர்வாகிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். 'ஜார்க்கண்ட் கவர்னராக இருந்தபோது, மதமாற்ற தடை சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தவர் முர்மு' என, தி.மு.க., செய்தித் தொடர்பு இணைச் செயலர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் போன்றவர்கள் பேசியதையும் ஸ்டாலின் கண்டித்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (18)

 • hari -

  காணோம்

 • duruvasar - indraprastham,இந்தியா

  The criticism work has already been assigned to VCK and Congress, which they are dutifully carrying efficiently. Real sixer shot from Stalin after a long gap.

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  2024-இல் பாஜக-திமுக கூட்டணி அரசு அமையும்போது கனிமொழிக்கு திரௌபதி முர்மு பதவிப்ரமாணம் செய்து வைக்க வேண்டி வரும். அதைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம்னுதான்... ஹிஹ்ஹி...

  • Raa - Chennai,இந்தியா

   palar

  • Raa - Chennai,இந்தியா

   பலர் அண்டை நாடுகளுக்கு குடி பெயர்ந்து விடுவார்

 • Tamilan - NA,இந்தியா

  இனம் இனத்தோடு சேருமா ?

 • GoK - kovai,இந்தியா

  இவர்களின் முன்னோடி நீதி கட்சி, அவர்கள் வெள்ளையர்களுக்கு கொடி பிடித்து சேவகம் செய்த வெட்கம் மானம் இல்லாத அரசியல் செய்தவர்கள். அந்த வழியில் வந்த இந்த பகுத்தறிவு பாசிகளுக்கு எங்கே வரும் நீதி, எங்கே வரும் சமூகம் இந்திரா காந்தியின் மீது கல் அடித்து மூக்கை உடைத்து கொலை முயற்சி செய்த பின் அவர் காலில் விழுந்து சர்க்காரியா ரிப்போர்ட்டை வாபஸ் செயது கொண்டவர்கள் அல்லவா இந்த கூட்டத்தின் முன்னோடிகள். ராஜிவ் காந்தியை தீர்த்து கொடியவர்களை அரவணைத்து பின் ராஜிவ் காந்தியின் குடும்பத்தின் காலில் விழுந்து ஸ்நான பிராப்தி பெற்றவர்களல்லவா இந்த திராவிட மாடல் செல்வங்கள். கொஞ்சம் பொறுத்து பாருங்கள் கோபாலபுரத்து வாரிசுகளுக்காக என்ன என்ன தியாகங்கள் செயகிறார்கள் என்று.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்