ADVERTISEMENT
சம்பால் : ஹிந்து கடவுள் படங்கள் அச்சிடப்பட்ட காகிதத்தில் கோழிக்கறியை 'பார்சல்' செய்து கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தின் சம்பால் நகரில் இறைச்சிக் கடை நடத்துபவர் தலிப் ஹுசைன். இவர் ஹிந்து கடவுள் படங்கள் அச்சிடப்பட்ட காகிதத்தில் கோழிக்கறியை பார்சல் செய்து கொடுத்து வந்தார்.

இது குறித்து சிலர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, சம்பால் போலீசார் ஹுசைன் கடைக்கு வந்து சோதனை செய்து, ஹிந்து கடவுள் அச்சிடப்பட்ட காகிதங்கள் ஏராளமாக இருப்பதைக் கண்டுபிடித்தனர். அப்போது, போலீசுடன் வாக்குவாதம் செய்த ஹூசைன், இறைச்சி வெட்டும் கத்தியால் போலீஸ்காரர்களை தாக்கினார்.
ஹுசைனை மடக்கிப் பிடித்து கைது செய்த போலீசார், மத துவேஷம், கொலை முயற்சி உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
செய்யரதையும் செஞ்சிட்டு கேட்டா போலீஸ்காரங்களையே வெட்டவந்திருக்கான்பாரு. உள்ளதள்ளிநல்லா லாடம் கட்டுங்க ஆபிசர்.