Load Image
dinamalar telegram
Advertisement

மாணவியரை முகம் சுளிக்க வைத்த மந்திரி!

Tamil News
ADVERTISEMENT
''கலெக்டரையே புலம்ப வச்சுட்டாவ வே...'' என, கையில் இஞ்சி டீயுடன் அரட்டையை ஆரம்பித்தார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த மாவட்ட கலெக்டர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம் இருக்குல்லா... இதுக்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள், செயலர்கள், பி.டி.ஓ.,க்களை கூப்பிட்டு, கிராம வளர்ச்சி பணிகள் எப்படி நடக்குன்னு கலெக்டர் முருகேஷ் ஆய்வு கூட்டம் நடத்தினாரு வே...

''கலசப்பாக்கம் யூனியன்ல, 45 பஞ்சாயத்து தலைவர்கள் இருக்காவ... ஆனா, கூட்டத்துக்கு, 20 பேர் கூட வரலை... கலெக்டர் முகமே வாடிப் போயிட்டு வே...


''கூட்டத்துல அவர் பேசுறப்ப, 'என்னை பார்க்க எத்தனையோ பேர் காத்து கிடக்காவ... ஆனா, இங்க பஞ்சாயத்து தலைவர்கள், என்னை பார்க்க வர மாட்டேங்காவ... வந்தவங்களும், என்னை ரொம்ப நேரம் காக்க வச்சு லேட்டா தான் வந்திருக்காவ'ன்னு, புலம்பி தள்ளிட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.


''விடிய விடிய சரக்கு விற்கிறாங்க பா...'' என, அடுத்த தகவலுக்கு தாவினார், அன்வர்பாய்.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.


''எல்லாம் நம்ம தலைநகர்ல தான்... சென்னை வேளச்சேரி, தரமணி, சைதாப்பேட்டை, ராமாபுரம், நெசப்பாக்கம், வளசரவாக்கம், ஆற்காடுசாலை ஏரியாவுல விடிய விடிய சரக்கு கிடைக்குது பா...''டாஸ்மாக் கடையோட சேர்ந்து இருக்கிற பார்கள்ல, 'நைட்' எந்நேரம் போய் கதவை தட்டினாலும், சரக்கு கிடைக்கும்...

விலை கொஞ்சம் அதிகமா இருந்தாலும், நெனச்ச நேரத்துக்கு சரக்கு கிடைக்கிறதால, 24 மணி நேர, 'குடி'மகன்கள் போதையிேலயே திரியுறாங்க... 'எங்க உயர் அதிகாரிகள் தலையிட்டா தான், இதை கட்டுப்படுத்த முடியும்'னு சில போலீசாரே சொல்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.


''கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டாராம் ஓய்...'' என, 'பில்டர்' காபியை ருசித்தபடியே பேசினார், குப்பண்ணா.

''யாரு வே அது...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''திருச்சி ஜமால் முகமது கல்லுாரியின் முப்பெரும் விழா சமீபத்துல ஜோரா நடந்தது... இதுல, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கலந்துண்டார் ஓய்...''அவர் பேசறச்சே, 'சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில நான் படிக்கறப்ப, குறிப்பிட்ட தேதிக்குள்ள ஹாஸ்டல் உணவு விடுதிக்கு பணம் கட்டணும்... இல்லேன்னா அபராதம் போட்ருவா...


''எங்கப்பா அல்வா வாங்கிண்டு போய் எங்கம்மாவுக்கு கொடுத்து, நைசா பேசி அவங்க நகையை வாங்கி அடகு வச்சு காசு அனுப்புவார்'னு பேசினார் ஓய்...''அவருக்கு அப்புறம், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு பேசினார்... ''அப்ப, பொன்முடியின் அப்பா அல்வா வாங்கி கொடுத்த சம்பவத்தை கேலியும், கிண்டலுமா உவமை கலந்து, கொஞ்சம் வரம்பு மீறி பேசிட்டாராம்...


அமைச்சரின் பேச்சு, மாணவியரை முகம் சுளிக்க வச்சுடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.' 'தி.மு.க., பொதுக்கூட்டம்னு நெனச்சு பேசியிருப்பாருங்க...'' என சிரித்தபடியே அந்தோணிசாமி எழ, பெஞ்ச் கலைந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (5)

 • Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா

  இதுகள் எப்பவுமே களியாட்டம் நினைப்புதான் ...இதுகளை சொல்லி என்ன பண்ண ..வந்த குரு குல வாசம் அப்படித்தானே ..கண்ணதாசன் அவர்கள் நிறையவே இந்த கூத்துக்களை கூறி இருக்கிறார்

 • கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா

  திருடர்கள் கழகம் உபிஸ் மாதிரியே உருட்டறாரு

 • r.sundaram - tirunelveli,இந்தியா

  குப்பைகள் கோபுரங்களில் ஏறினால் இப்படித்தான் பேசும். இது நமது தலைவிதி. இன்னும் நான்கு ஆண்டுகள் பொறுத்துத்தான் ஆக வேண்டும். இல்லை அண்ணாமலையார் நினைத்தால் நடக்கும். ஆண்டவன் மனம் இரங்க வேண்டுமே.

 • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

  சபை நாகரிகம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்பவர்கள்தானே இளையவர் 'அழகான வருக்கு ஒட்டுப் போடுங்கள் ' என்கிறார், இன்னொருவாரோ மாணவர்கள் தான் பாடுபட்டுப் படித்து வேலைக்குப் போக வேண்டும், பெண்களுக்கு அழகால் வேலை சம்பாதிக்க முடியும் என்று அருவருப்பின் உச்சத்திற்கே போகிறார், விடியல் உளறல்களுக்கு விவஸ்தையே இல்லை

  • தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU ,இந்தியா

   அளவுகடந்த உவகை அதிகம் பேசச்சொல்லும் …..

Advertisement