ADVERTISEMENT
'இத்தனை நாட்களாக எந்தவித பயமும் இல்லாமல்இருந்தவருக்கு, இப்போது தான் லேசாக உதறல் எடுத்துள்ளது...' என்று ஆந்திர முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டியை பற்றி கூறுகின்றனர், அங்குள்ள அரசியல்வாதிகள்.
கடந்த, 2019ல் நடந்த சட்டசபை தேர்தலில், 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் ஜெகன்மோகன் ரெட்டி.மாநிலத்தில் பல புதுமையான திட்டங்களை செயல்படுத்தினார்; இது, அனைவரிடமும் பாராட்டை பெற்றது.இந்த சமயத்தில் தான், பா.ஜ., மேலிடம் மெல்ல மெல்ல ஆந்திராவுக்குள் மூக்கை நுழைத்தது.
'எப்படியாவது அடுத்த தேர்தலில்ஆட்சியை பிடித்து விடவேண்டும்' என்ற முனைப்பில், பா.ஜ., முக்கிய நிர்வாகிகள் ஆந்திராவுக்குள் இறக்கி விடப்பட்டு உள்ளனர்.பா.ஜ., மேலிடத்தின் இந்த வேகம், ஜெகனுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக ஆந்திர சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலுடன் இணைந்து நடத்தப்படும். ஆனால், அடுத்த சட்டசபை தேர்தலை, தனியாக நடத்த விரும்புகிறார் ஜெகன்.லோக்சபா தேர்தலுடன் சேர்த்து நடத்தினால், சட்டசபை தேர்தலில் அதிக கவனம் செலுத்த முடியாது. அதனால், வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என, ஜெகனுக்கு பயம் வந்துள்ளது.
எனவே, 'சட்டசபை தேர்தலை முன் கூட்டியே நடத்த வேண்டும்' என, சமீபகாலமாக வலியுறுத்தி வருகிறார். 'ஜெகனின் கோரிக்கை நிறைவேறுவதும், நிறைவேறாததும் மத்திய அரசின் கைகளில் தான் உள்ளது...' என்கின்றனர், ஆந்திர அரசியல்வாதிகள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!