ADVERTISEMENT
ஹைலாண்டு பார்க் : அமெரிக்காவில் சுதந்திர தின விழா அணிவகுப்பின் போது மர்ம நபர் சுட்டதில், ஆறு பேர் உயிரிழந்தனர். நேற்று அமெரிக்காவின் 246வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, நாடெங்கும் கொண்டாட்டம் கொடி கட்டிப் பறந்தது.
இது குறித்து, போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:விசாரணையில், கொலையாளியின் பெயர் ராபர்ட் கிரிமோ, 22, என்பது தெரிய வந்துள்ளது. அணிவகுப்பு நடந்த இடத்தில், ஒரு கட்டடத்தில் இருந்து அவர் சுட்டது கண்டுபிடிக்கப்பட்டது.கொலையாளி விட்டுச் சென்ற துப்பாக்கி கைப்பற்றப்பட்டுள்ளது.மிக சக்தி வாய்ந்த அந்த துப்பாக்கியை யார் கடைசியாக விற்பனை செய்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். விரைவில் கொலையாளியைப் பிடிப்போம்.
சுதந்திர தின விழா

அதிர்ச்சி
குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஐந்து பேர் உயிரிழந்தனர்; ஒருவர் மருத்துவமனையில் இறந்தார். படுகாயம் அடைந்த 26 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொலையாளி பதுங்கியுள்ளதால், இப்பகுதியில் நடக்கவிருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார். இந்த கோர சம்பவம் குறித்து அதிர்ச்சி தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மகிழ்ச்சியான நாளை சோகமாக்கிய கொலையாளியை விரைந்து பிடிக்க உத்தரவிட்டு உள்ளதாக தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
பிரதி மாதம், இருபது அல்லது மேற்பட்ட துப்பாக்கி சூடுகள், பிரதி மாதம் முப்பது அல்லது அதற்க்கு மேற்பட்டோர் மரணம்.. இந்தியாவின் மத சுதந்திரம் மற்றும் தனி மனித பாதுகாப்பு பற்றி அமெரிக்க விமர்சனம்.. கேவலம் பைடேன்