Load Image
dinamalar telegram
Advertisement

வெள்ளத்தில் மூழ்கிய சிட்னி: 50 ஆயிரம் பேர் பாதிப்பு

சிட்னி:கனமழை காரணமாக ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால், 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.Latest Tamil News
ஆஸ்திரேலியாவின் பல பகுதிகளில் கடந்த ஐந்து நாட்களாக கன மழை பெய்து வருகிறது. 50 லட்சம் பேர் வசிக்கும் சிட்னி நகரம் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் ஆறுகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து, சிட்னி நகருக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து, 50 ஆயிரத்திற்கும் அதிகமானோரை வீடுகளை விட்டு வெளியேறுமாறு அரசு எச்சரித்துள்ளது. மேலும் வீடுகளில் சிக்கியுள்ளோரை படகுகள் மூலம் மீட்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.Latest Tamil News இதற்கிடையே, நியூ சவுத் வேல்ஸ் கடற்பகுதியில், 21 பேருடன் தத்தளித்த சரக்கு கப்பலை துறைமுகத்திற்கு இழுத்து வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது.ஆனால், கடும் சூறாவளி வீசியதால், அப்பணி தோல்வியடைந்தது. இதையடுத்து, கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    அப்படிப்பட்ட சிட்னி நகரம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது என்றால், நமது சிட்லபாக்கம் முழுகுவதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்