Load Image
dinamalar telegram
Advertisement

வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.80 சதவீதமாக உயர்வு

புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.12 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்தில் 7.80 சதவீதமாக உயர்ந்துள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
Latest Tamil News

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் சரிவால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து உள்ளது. நகர்ப்புறத்தை பொறுத்தவரை, வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.21 சதவீதத்திலிருந்து, 7.30 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.Latest Tamil News
இது குறித்து, சமூக மேம்பாட்டு கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் நித்யானந்த் கூறியதாவது:ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கரீப் பருவத்தின் விதைப்பு துவங்கும் நேரத்தில், வேலையின்மை அதிகரிப்பது வழக்கமானது தான். அதே சமயம், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது சாதகமான அம்சமாகும்.இருப்பினும், இன்னும் நாம் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீளவில்லை என்பதையே ஜூன் மாத நிலவரம் காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (6)

  • ராஜா -

    அதான் தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளுக்கு 5000 என்னும் அளவில் வேலைவாய்ப்பு வந்து குவியப்போகுதே. வேலைக்கு ஆள் கிடைக்காமல் வடநாட்டில் பிச்சை எடுத்துகொண்டு சில டாஸ்மாக் தமிழர்களுக்கு பேச்சை பாருங்கள்.

  • Priyan Vadanad - Madurai,இந்தியா

    இந்த பொல்லாத கடவுளும் இந்த சனியன் பிடிச்ச கொரோனாவை நம்மை ஆளும் அரசுகளுக்கு சாதகமாக அனுப்பி வச்சுட்டான். எல்லாத்துக்கும் கொரோனாமேல பழிபோடுறாங்க. மொதல்ல அவனை பிடிச்சி காய்ச்சி வறுக்கணும்.

  • Narayanan Muthu - chennai,இந்தியா

    ஆட தெரியாதவளுக்கு மேடை கோணல் எனும் கதை அனைவரும் அறிந்ததே. இவர்களின் புள்ளிவிவரம் உண்மை நிலவரத்தை விட மூன்று மடங்குக்கு மேல் அதிகமாக இருக்கவே வாய்ப்பு. எங்கும் பொய் எதிலும் பொய் எப்போதும் பொய் என்பதே இந்த பிஜேபி அரசின் தாரக மந்திரம்.

  • Mannandhai -

    Please inform in actual number of persons nor in percentage of unemployed. 7.8. percent is almost equal to 10 crores. Whenever government s opportunities, they say in figures like 2 lakh jobs d like that. That can be expressed in percentage like 0.1 percentage people will get jobs.

  • அப்புசாமி -

    எல்லோரையும் கிராமத்திலிருந்து நகரங்களுக்கு அடிச்சு துரத்த முடியுமான்னு பாருங்க. வேலை வாய்ப்பின்மை குறையும். அப்புறம் பஜ்ஜி, பக்கோடா விக்கிற ஆளுங்களயும் கணக்கில் சேக்கணும். வருஷத்துக்கு 2 கோடி வேலை கிடைச்சவங்களை கணக்கில் சேத்தாச்சா. கொரோனாவை மட்டும் காரணம் சொல்லாதீங்க. போணியாகாது. நேருதான் காரணம்னு ஆரம்பிச்சு, உக்ரைன் போரையும் சேத்துக்கோங்க. சக்திதாசும், நிதியமைச்சரும் பொருளாதாரம் சும்மாபிச்சிக்கிட்டு போகுதுன்னு சொன்னாங்களே...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்