இது பற்றி மேலும் அவர்கள் கூறியிருப்பதாவது: கச்சா எண்ணெய் உற்பத்தி மீதான சமீபத்திய வரிவிதிப்பு போன்ற பல்வேறு காரணங்களால் 2023 நிதியாண்டின் ஜிடிபி.,யில் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை 3.3 சதவீதமாக விரிவடையும். மந்தமான ஏற்றுமதி மற்றும் உயர்ந்து வரும் இறக்குமதியால் ஜூன் மாதத்தில் வணிகப் பொருட்களின் வர்த்தக பற்றாக்குறை 2506 கோடி அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது . இது மே மாதத்தில் 2403 கோடி அமெரிக்க டாலரை எட்டியிருந்தது.

ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வளர்ச்சி கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 16.8 சதவீதமாக உள்ளது. ஜூன் மாதத்தில் இறக்குமதி வளர்ச்சி 51 சதவீதமாக உயர்ந்துள்ளது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை ரூபாய் மதிப்பை தொடர்ந்து சரிவடைய செய்யும். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் இருந்து இந்தாண்டு இதுவரை ரூ.2.1 லட்சம் கோடியை வெளியே எடுத்திருப்பதால் ரூபாய் மதிப்பு மேலும் மோசமடையும். 2022 மூன்றாம் காலாண்டில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 82 ஆக குறையும்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகித உயர்வில் தீவிரமாக இருப்பதால் அது டாலரை மேலும் வலுப்படுத்தும். 2022ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் அமெரிக்காவில் மந்தநிலையை ஏற்படுத்தும். இத்தகைய சூழல் வளர்ந்து வரும் சந்தைகளான இந்தியாவுக்கு ஏற்றதல்ல. அவை ஆரோக்கியமான உலகளாவிய வளர்ச்சி மற்றும் பங்கு முதலீடுகளை சார்ந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 4 சதவீத பணவீக்க இலக்கு கவலை தருகிறது. இது உள்ளூர் பத்திர சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை வெளியேற்றும். இந்தாண்டில் இதுவரை ரூ.15 ஆயிரம் கோடி வெளியேறியுள்ளது. இவ்வாறு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
இந்த மாதிரியெல்லாம் செய்திகள் வந்துவிட்டால் மக்கள் சிந்திக்க ஆரம்பித்து விடுவார்கள்,