Load Image
dinamalar telegram
Advertisement

தமிழகத்தை ரெண்டாக்குங்க - பாஜ.,: உ.பி.,யவே பிரிக்க முடியல- திமுக

Tamil News
ADVERTISEMENT
திருநெல்வேலி: தமிழகத்தை பாண்டியநாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும். அப்போது தான் நிர்வாக ரீதியாக தமிழ்நாட்டுக்கு அதிக திட்டங்களை பெற முடியும் என பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள தி.மு.க., செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், உ.பி.,யையே பிரிக்க முடியவில்லை. தமிழகத்தை பிரிக்க வேண்டும் என்கிறார்கள் எனக்கூறியுள்ளார்.

தனி நாடு கேட்ட ராசா



நாமக்கல்லில் தி.மு.க., சார்பில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் பேசிய அக்கட்சி எம்.பி., ராசா, எவ்வளவோ பேசிவிட்டோம். எழுதிவிட்டோம். ஆனால், மாநில சுயாட்சி இன்றும் கிடைக்கவில்லை. தனிநாடு கேட்க விட்டுவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம் என்றார்.

போராட்டம்



Latest Tamil Newsஇந்நிலையில் ஆளும் தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பா.ஜ., சார்பில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடந்தது. திருநெல்வேலியில் பாளையங்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நெல்லை எம்.எல்.ஏ.,வும், பாஜ., சட்டசபை கட்சி தலைவருமான நயினார் நாகேந்திரன் பேசுகையில், தமிழ் நாடு வேண்டும் என்று ஆ.ராசா கூறுகிறார். ஏன் நான் சொல்கிறேன் தமிழகத்தை பாண்டியநாடு பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும் என்றார்.

ஆசை



Latest Tamil News


ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், தனிநாடு வேண்டும் என்பது ஆ.ராசாவின் சொந்த கருத்து. அது ஆ.ராசாவின் ஆசை என்றால், தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்பது எனது ஆசை. எம்.ஜி.ஆர்., ஆட்சி காலத்தில் தூத்துக்குடி தனி மாவட்டமானது. பழனிசாமி ஆட்சி காலத்தில் திருநெல்வேலியில் இருந்து தென்காசி தனி மாவட்டமானது. என்னுடைய ஆசை, தமிழகத்தை பாண்டிய நாடு, பல்லவ நாடு என இரண்டாக பிரிக்க வேண்டும்.ஆந்திராவில் தெலுங்கானா தனி மாநிலம் பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அங்கு கிடைத்துள்ளது. எனவே தமிழகத்தை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும். பாஜ ஆட்சிக்கு வந்தால் நிறைய நிதி பெற முடியும். தமிழகத்தில் போதை பழக்கம் அதிகரித்துள்ளது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜ., தலையீடு எதுவும் இல்லை. அதிமுக விவகாரத்தில் பாஜ எப்பொழுதுமே நடுநிலையாக தான் செயல்படும் என்றார்.

அற்ப ஆசை



Latest Tamil News

இது தொடர்பாக தி.மு.க.,வின் செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், 403 சட்டசபை தொகுதிகளை கொண்ட உ.பி.,யை பிரிக்க முடியவில்லை. தமிழகத்தை பிரிக்க வேண்டும். என்ன காரணத்திற்காக பிரிக்க வேண்டும் எனக்கூறுகிறார்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற அதிகாரத்தை வைத்து கொண்டு தமிழகத்தை இரண்டு அல்லது மூன்று மாவட்டங்களாக பிரிக்க வேண்டும் என்கிறார்கள். என்னுடைய அற்ப ஆசை, தமிழகத்தை 3 ஆக பிரித்தால், தி.மு.க.,வை சேர்ந்த 3 பேர் முதல்வராக இருப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (40)

  • John Miller - Hamilton,பெர்முடா

    நெய்னார் பேசி அது பெரிதாக செய்தியாக்கப்பட்டு வருகின்றதே.

  • J.Isaac - bangalore,இந்தியா

    23லட்சம் கொண்ட உ.பியை இன்னும் மூன்றாக பிரிக்க வேண்டும். கட்சிகளை உடைத்து ஆட்சியை பிடிப்பதில் நரித்தந்திரம் உள்ளது பிஜேபி.

  • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

    திராவிட நாட்டை பிரித்து மேய்ந்து விடுவார்கள் போல இருக்கிறது.

  • Krishnan - Chennai,யூ.எஸ்.ஏ

    கொங்குநாடு, பாண்டிய நாடு உருவானால் அங்குள்ளவர்களுக்கு தான் நன்மை. தமிழகத்தில் உள்ள 11% பொதுப்பிரிவினரின் முதுகில் குத்தும் திமுக அரசை கலைக்கவேண்டும்.

  • Barakat Ali - Medan,இந்தோனேசியா

    தமிழக பிஜேபி இது போன்ற உதவாக்கரை பேச்சுக்களை விட்டுவிட்டு இருக்கும் ஆயிரம் நிர்வாகச் சீர்கேடுகளை பற்றி பேசட்டும் .....

Advertisement