ADVERTISEMENT
மும்பை: சிவசேனா பால் தாக்கரேவுக்கு சொந்தமானது, வேறு யாருடையதாகவும் இருக்க முடியாது என்றும், பணத்தின் மூலம் கட்சியை யாரும் விலைக்கு வாங்க முடியாது எனவும் சிவசேனாவின் சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில், உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த அரசுக்கு எதிராக சில சிவசேனா எம்எல்ஏ.,க்கள் போர்க்கொடி தூக்கியதுடன், அசாமில் தஞ்சம் அடைந்தனர். பிறகு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் பா.ஜ., உடன் கூட்டணி அமைத்து தற்போது ஆட்சி அமைத்தனர். இதில் ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். நேற்று (ஜூலை 4) நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பிலும் ஷிண்டே தலைமையிலான மஹா., அரசு பெரும்பான்மையை நிரூபித்தது.
இந்த நிலையில் சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவசேனா 100 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று உறுதியுடன் உள்ளோம். இடைத்தேர்தல் வரட்டும், யார் ஜெயிப்பார்கள், யார் தோற்பார்கள் என்பது எல்லாம் தெளிவாகும் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். சிவசேனா பால் தாக்கரேவுக்கு சொந்தமானது. வேறு யாருடையதாகவும் இருக்க முடியாது. பணத்தின் மூலம் கட்சியை விலைக்கு வாங்க முடியாது.

பணம் மட்டுமல்லாது வேறு ஏதாவது கொடுக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். இந்த 'ஏதாவது' வெளிப்படும் போது தெரியவரும். அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் திரும்பி வருவார்கள் என்று நாங்கள் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறோம். அவர்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அவர்கள் எங்கள் கட்சியினர், மீண்டும் வருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (24)
வாரிய சொல்லிட்டாரு உட்தவை எதிர்த்தவன் எல்லாம் உத்தமன் என்று உட்தவெய் இனி பேசமுடியாது
கங்கனா மட்டுமே போதும் இவர்களுக்கு தண்ணி காட்ட
ஆடு ஆடு ஆட்டம் கொஞ்ச நாட்களுக்கு மட்டும் தான்
நீங்களோ..உங்க கட்சி காரங்களோ...பணத்துக்காக போக மாட்டிங்க தான்...பதவிக்காக போனிங்க தானா..காங்..தே.காங்..கூட.. அவனுங்க சம்பாரிக்க துனை போனிங்க...அதான் ஷின்டே தலைமையில் சிவசேனா.. மக்கள் ..தொண்டர்கள் ஏற்கும் சிவசேனா...புரிஞ்சு..வீரசிவாஜியின் மண்ணின் மைந்தர்கள இருங்க
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
ஒருவேளை பிட் காயின் என்றால் ஓகேவா?....