ADVERTISEMENT
புதுடில்லி: டில்லியில் இருந்து துபாய் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
டில்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடிவுசெய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
விமானம் கராச்சியில் பத்திரமாக தரையிறங்கியது மற்றும் பயணிகள் பாதுகாப்பாக இறக்கிவிடப்பட்டனர். அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை, விமானம் சாதாரணமாக தரையிறக்கப்பட்டது. விமானத்தில் கோளாறு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. பயணிகளை துபாய்க்கு அழைத்துச் செல்லும் மாற்று விமானம் கராச்சிக்கு அனுப்பப்படுகிறது,' என்றார்.
டில்லியில் இருந்து துபாய் கிளம்பிய ஸ்பைஸ்ஜெட் எஸ்.ஜி-11 விமானம் தொழில்நுட்ப கோளாறால் பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் தரையிறங்க முடிவுசெய்தனர். அதன்படி கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இது குறித்து ஸ்பைஸ்ஜெட் நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‛விமானத்தின் இண்டிகேட்டர் விளக்கு செயலிழந்ததால் கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஸ்பீஸ் ஜெட் தி மு காவுக்கு சொந்தமானது , வேணுமுன்நே பாகிஸ்தானுல இறக்கியிருப்பாங்களோ .... எதாவது பிசினஸ் டீலோ