கேரளாவின் வயநாட்டில் தன் அலுவலகம் சூறையாடப்பட்டது பற்றி ராகுல் பேசிய பேச்சின் வீடியோ பதிவை, ராஜஸ்தானின் உதய்பூரில் டெய்லர் படுகொலை செய்யப்பட்டதுடன் தொடர்புப்படுத்தி டிவி செய்தியாளர் ரோகித் ரஞ்சன் பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. பல தலைவர்கள் அதனை வெளியிட்டு ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அந்த வீடியோ பொய் என தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் அந்த வீடியோவை நீக்கினர். இதற்கு அந்த டிவி நிறுவனம் மன்னிப்பு கோரியது. இருப்பினும், இந்த வீடியோ வெளியிட்டதற்கு எதிராக அந்த நிறுவனம் வாசலில் காங்கிரசார் உருவபொம்மையை எரித்து போராட்டம் நடத்தினர்.
ராகுல் குறித்து அவதூறு பேசியதாக ரோகித் ரஞ்சன் மீது பல்வேறு மாநிலங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
முன்னதாக அவரை கைது செய்வதற்கு சத்தீஸ்கரின் ராய்ப்பூர் போலீசார், உ.பி.,யின் காசியாபத்தின் இந்திரபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தனர். இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட அறிக்கையில், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் சத்தீஸ்கர் போலீசார் என்னை கைது செய்வதற்கு வீட்டு வாசலில் காத்திருக்கின்றனர். இது சட்ட விரோதம் எனக்கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ராய்ப்பூர் போலீசார், உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது சட்டமல்ல. இருப்பினும் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் கைது வாரண்ட்டை போலீசார் காட்டுவார்கள். போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். விசாரணையில் இணைந்து, உங்களது தரப்பு நியாயத்தை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் எனக்கூறியுள்ளனர்.

உ.பி.,யின் காசியாபாத் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரம் உள்ளூர் போலீசாரின் கவனத்தில் உள்ளது. இந்திராபுரம் போலீஸ் ஸ்டேசனும் அருகில் உள்ளது. சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியிருந்தனர்.
இதனிடையே, ரோகித் ரஞ்சனை, சத்தீஸ்கர் போலீசார் கைது செய்வதை தடுக்கும் போருட்டு, காசியாபாத் போலீசார், அவரை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு அழைத்து சென்றனர். தற்போது, அவர் எங்கு உள்ளார் என்ற விபரத்தை தெரிவிக்காத காசியாபாத் போலீசார், அவர் மீது ஜாமினில் வெளியே வரக்கூடிய வகையில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இவன் பெயர் ஜுபைர் என இருந்திருந்தால் இந்நேரம் உபி அரசு துரித நடவடிக்கை எடுத்திருக்கும் ஆனால் இவன் பெயர் ரோஹித் அல்லவா சத்தீஸ்கர் போலீஸ் கைது செய்ய வரும் வரை யோகியின் உபி காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதிலிருந்தே தெரிகிறது இவனை இதுபோல வீடியோ மார்பிங் செய்ய சொன்னதே பாஜக ரவுடிகள் தான் என்பது , கடைசியில் இவனை சத்தீஸ்கர் போலீசிடம் இருந்து காப்பாற்றி எங்கோ ராஜா மரியாதையோடு வைத்திருக்கிறார்கள் , இல்லாததை பொய்யாக ஒளிபரப்பிய இவனை பாதுகாக்கிறது மோடி அரசு ஆனால் நூபுர் சர்மா பேசியதை வெளியிட்டதற்க்காக பத்திரிகையாளர் ஜுபைர் கைது செய்யப்பட்டு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது இதுதான் மோடி அரசின் சர்வாதிகாரத்திற்கு எடுத்துக்காட்டு.