ADVERTISEMENT
உத்தமபாளையம் : தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்கும் ராமக்கல் மெட்டு, சாக்குலுத்து மெட்டு சாலை திட்டங்களை செயல்படுத்த வனத்துறை அனுமதிக்க ஏல விவசாயிகள் கோரியுள்ளனர்.
தேனி மாவட்டத்திலிருந்து கேரளாவை இணைக்க போடிமெட்டு, கம்பமெட்டு,குமுளி மலைப் பாதைகள் உள்ளன. மூன்று ரோடுகளுமே வனப்பகுதி வழியாகவே செல்கிறது. இடுக்கி மாவட்டதில் உள்ள ஏலத்தோட்டங்களுக்கு தமிழக விவசாயிகள் தினமும் செல்கின்றனர்.

அதில் கம்பம், குமுளி வழியாக வண்டன் மேடு, மாலி, கட்டப்பனை போன்று பகுதிகளுக்கு எளிதாக செல்லலாம். ஆனால் கோம்பை, பண்ணைப்புரம், தேவாரம் பகுதியில் உள்ளவர்களுக்கு நெடுங்கண்டம், சாந்தாம்பாறை, பாரத்தோடு பகுதிகளில் தோட்டங்கள் உள்ளன. இவர்களின் வசதிக்காக சாக்குலூத்து, ராமக்கல் மெட்டு ரோடுகள் அமைக்கப்பட்டன.
ஆனால் பணிகள் நிறைவடைய வனத்துறை அனுமதிக்கவில்லை. இதனால் விவசாயிகள் பல மணிநேரம் பயணம் செய்ய வேண்டி உள்ளது. சாக்குலூத்து, ராமக்கல் மெட்டு ரோடு திட்டங்களை நிறைவேற்ற வனத்துறை அனுமதிக்க வேண்டும் என்று ஏல விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கேரளா விமானத்தில் காய்கறிகள் கொண்டு வர இயலும் ..பொருளாதாரம் அப்படி ..