கலெக்டர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் ஆணையர் பிரதாப்குமார் பங்கேற்று தகவல் பெறும் உரிமை சட்டம் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். தகவல் கோரி வரும் அனைத்து மனுக்களுக்கும் அதிகாரிகள் தகவல் தெரிவிக்க வேண்டும். மூன்றாவது நபர், தனிநபர் குறித்த தகவல் மட்டும் அளிக்க தேவையில்லை. ஒருவர் எத்தனை முறை மனு கொடுத்து கேட்டாலும் கட்டாயம் தகவல் கொடுக்க வேண்டும் எனக்கூறினார்.
பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தகவல் பெறுவதில் நகர மக்களை விட கிராம மக்கள் விழிப்புணர்வு அடைந்துள்ளனர். மேல் முறையீட்டு மனு, நாள் ஒன்று 500க்கு மேல் வருகிறது. இதில் ஊரக வளர்ச்சி முகமை, வருவாய்த்துறை, போன்ற துறைகள் மீது பட்டா மாற்றம், நில ஆக்கிரமிப்புகள், ஊராட்சி பணி முறைகேடுகள் போன்றவை குறித்து தகவல் கேட்டு விண்ணப்பிக்கின்றனர்.
கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, கடலுார் போன்ற பகுதிகளில் இருந்து 40 மேல் முறையீட்டு மனுக்கள் வந்துள்ளன. அது போன்று இன்று 40 மேல் முறையீட்டு மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளன.பட்டா மாற்றம் குறித்து தகவல் கேட்டு 2020ல் விண்ணப்பித்த மனுதாரருக்கு தகவல் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த விருத்தாசலம் துணை தாசில்தாருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்தும், பட்டா மாற்றம் குறித்த தகவல் இரு நாட்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக ஆணையர் பிரதாப்குமார் கூறினார்.
வாசகர் கருத்து (7)
சந்தேகம் வேறா? எல்லா நதிகளும் கடலில் விழுவதுதானே விதி அதுபோல சில்லறை லஞ்சங்களை ஊக்குவித்து, அவர்களே மெகா லஞ்சம், கமிஷன், கட்டிங் எல்லாவற்றையும் செவ்வனே 'கொண்டு சேர்க்கும்' சேவை ஒழுங்காக உள்ளவரை அதிகாரிகள் மீது எந்த அரசும் கைவைக்காது
அந்த தாசில்தார் தனக்கு ரூ. 25,000 அபராதம் விதித்ததற்காக கோபம் கொண்டு, வரும் நாட்களில், அதிக ஊழல் செய்து அதைவிட அதிகம் சம்பாதித்துவிடுவான். யார் கிட்ட...?
தாசில்தார் தினமும் வாங்கும் லஞ்ச amount க்கு 25000 என்பது ஒன்றுமேயில்லை....
அரசு மக்கள் பணத்தை பல வழிகளில் வீணாக்குகிறது, தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு பதிலளிக்க தனி தாசில்தார் போடலாமே? வரும் மனுக்களுக்கு இந்த தாசில்தாரே மற்ற தாசில்தார்களை கேட்டு பதில் அனுப்பலாமே? அணில் டிப்பர்மெண்டில் சமீபத்தில் கொடுத்த காண்டிராக்டுகள் பத்தி யாராவது கேள்விகள் அனுப்பினால், பதில் வர வாய்பில்லை, பலகோடி அபராத தொகை சம்பாதிக்க நல்ல வாய்ப்புள்ளது. பிஜேபி முயற்சி செய்து கட்சி நிதியில் சேர்த்துகொள்ளலாம்.
திமுகாவில் இந்த பதவிக்கு தகுதியான நபர் இல்லையா?