Load Image
dinamalar telegram
Advertisement

உங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சி: கமலுக்கு கிண்டலுடன் வானதி வாழ்த்து

Tamil News
ADVERTISEMENT
கோவை : கமலஹாசனின் 'விக்ரம்' படத்தை பார்த்துவிட்டு, வித்தியாசமாக வாழ்த்து சொல்லியுள்ளார், பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன்.

கமலஹாசனின் 'விக்ரம்' திரைப்படம், பெரும் வரவேற்பை பெற்று, வசூலை குவித்து வருகிறது. பலரும் படத்தை பாராட்டி வருகின்றனர். கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், நேற்று விக்ரம் படத்தை பார்த்துவிட்டு, தன் பங்குக்கு பாராட்டியுள்ளார்.
Latest Tamil News“சட்டசபைத் தேர்தலில் உங்களை வென்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விக்ரம் திரைப்படம் பார்த்தேன். உங்களது கலைப்பணியால் தொடர்ந்து எங்களை மகிழ்விக்க வேண்டும் கமலஹாசன்,” என, கிண்டல் கலந்து பாராட்டியுள்ளார்.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட வானதி சீனிவாசன், கமலஹாசனை தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (51)

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    பாவம் நீங்கள் தோற்று இருந்தால், இந்நேரம் மத்திய அமைச்சராகவோ, கவர்னராகவோ இருந்திருப்பிர்கள்

  • Girija - Chennai,இந்தியா

    தொகுதி மக்கள் ஆனந்தமாக இல்லை உங்கள் மந்தமான செயல்பாட்டால் ...........

  • abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா

    ஆணவம் அகம்பாவம் ,தனது வெற்றியை ஒருவர் கொண்டாடலாம் ஆனால் தன்னிடம் தோற்றவரை அதை குத்தி காட்டி புண்படுத்த கூடாது இதெல்லாம் இந்த ரவுடி பெண்மணியிடம் எதிர்பார்க்க முடியாதுதான்......

    • abibabegum - madurai- Anna nagar-எங்கள் மார்க்கம் அமைதி மார்க்கம் ,இந்தியா

      அதை சொல்வது ஒரு ரவுடி நியாயமா தம்பி

  • Nallavan - Periyakulam,இந்தியா

    Dear மேடம்... கமல்க்கு கிடைத்த ஓட்டுக்கள் அவருக்காக கிடைத்தது. ஆனால் உங்களுக்கு கிடைத்தது அதிமுக மற்றும் கூட்டணி வாக்குகள். கமல் நிற்க வில்லை என்றால் நீங்கள் தோற்று இருப்பீர்கள்.. திமுக விடம்.. மேலும் மோடி பிரச்சாரம் ... மற்றும் அதிமுக கோட்டையில்.. அவர்கள் தயவில் உங்கள் வெற்றி ... உண்மையில் கமலுக்கே வெற்றி..

    • Neutrallite - Singapore,சிங்கப்பூர்

      அடி வாங்குனது அவர் தான்...அதனால கோப்பை அவருக்கு தான் என்பது போல இருக்குது. கமலுக்கு கிடைத்த வோட் சினிமாவுக்கு கிடைத்தது...அந்த மாயைக்கு கிடைத்தது.

  • theruvasagan -

    கூத்தாடி வேஷதாரி தோற்றுப் போனால் மட்டும் கேவலம் இல்லை. ஜெயிச்சாலும் கேவலம்தான். இது ஒண்ணும் அரசியல் பண்ண அரசியலுக்கு வரலை. அரசியல் வியாபரத்துல ஓட்டை பிரிக்கப் போட்ட செட்...டப்பு

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்