Load Image
dinamalar telegram
Advertisement

காரைக்கால் மீனவர்களை மீட்க மத்திய அரசுக்கு ரங்கசாமி கடிதம்

Tamil News
ADVERTISEMENT

புதுச்சேரி : இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள புதுச்சேரி மற்றும் தமிழக மீனவர்கள் 12 பேரை மீட்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்ட மீனவர்கள் 5 பேர் மற்றும் தமிழகத்தை சேர்ந்த 7 மீனவர்கள், கடந்த 3ம் தேதி மாலை ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டு இருந்தனர்.ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், அத்துமீறி இலங்கை கடற்பகுதிக்குள் வந்து மீன் பிடித்ததாக கூறி மீனவர்கள் 12 பேரையும் சிறை பிடித்தனர்.



அவர்களை விசைப்படகுடன் இலங்கை கொண்டு சென்று, கடற்படை முகாமில் ஒப்படைத்தனர்.இதனையறிந்த மீனவர்களின் குடும்பத்தினர் முதல்வர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு மீனவர்களையும், படகையும் மீட்டுத்தர நடவடிக்கை எடுக்கும்படி வேண்டுகோள் விடுத்தனர்.இதனையடுத்து முதல்வர் ரங்கசாமி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், இலங்கை கடற்படையிடம் சிக்கியுள்ள புதுச்சேரி, தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்களை மத்திய அரசு மூலம் அழுத்தம் கொடுத்து மீட்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement