Load Image
dinamalar telegram
Advertisement

50 ஆயிரம் விவசாயிகளுக்கு ஆக., 31க்குள் மின் இணைப்பு

சென்னை-நடப்பாண்டில், 50 ஆயிரம் விவசாய மின் இணைப்பு வழங்கும் பணியை ஆக., 31க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களை, தமிழக மின் வாரியம் அறிவுறுத்திஉள்ளது.
Latest Tamil News
தமிழக மின் வாரியம், சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவுகளின் கீழ் விவசாய மின் இணைப்பு வழங்குகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், மின் வழித்தட செலவு இலவசம். சுயநிதி பிரிவில் வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்; மின்சாரம் மட்டும் இலவசம்.மின் வாரியம், நிதி நெருக்கடியில் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு அனுமதி அளிக்கும் எண்ணிக்கைக்கு ஏற்ப, விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.


இதனால், விவசாய இணைப்பு கேட்டு, 2021 மார்ச் வரை, 4.54 லட்சம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்தன.அதில், 2021 - 22ல் முதல்முறையாக ஒரே ஆண்டில் ஒரு லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டன. நடப்பு, 2022 - 23ல், 50 ஆயிரம் விவசாய மின் இணைப்புகள் வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
Latest Tamil News அதற்கு ஏற்ப, மின் இணைப்பு வழங்கும் பணி, மே இறுதியில் துவங்கிய நிலையில், இதுவரை, 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மீதியுள்ள 40 ஆயிரம் விவசாய இணைப்பு வழங்கும் பணிகளை ஆக., 31க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை மின் வாரியம் அறிவுறுத்திஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (3)

  • Sundar - Ranipet,இந்தியா

    சென்ற வருடம் சொன்ன ஒரு லட்சம் மின் இணைப்புகளையே இன்னும் கொடுத்து முடிக்கவில்லை. அதற்கு கொண்டாட்டம் மட்டும் 28.03.22 நடந்தது. ஆனால் விவசாயிகளின் திண்டாட்டம் யாருக்கும் தெரியவில்லை. பல லட்சங்கள் கடன் வாங்கி போர் போட செலவு செய்து மின் இணைப்பு இன்னும் கிடைக்கப்பெறாமல் தவிக்கின்றனர். மின் வாரியத்தில் ஆயிரம் காரணம் கூறி ஏனோ அலைகழிக்கின்றனர். கடவுளே விவசாயிகளை காப்பாற்று....

  • duruvasar - indraprastham,இந்தியா

    சுதந்திரம்வந்து 75 ஆண்டுகள் ஆகியும் தமிழ்நாட்டில் ஏற்றம் இறவை பாசனம் நடந்து konduirundhirukirafhu என தெரிய வந்த பிறகு நெஞ்சம் வருந்துகிறது

  • Mani . V - Singapore,சிங்கப்பூர்

    "........வழங்கும் பணிகளை ஆக., 31க்குள் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, பொறியாளர்களை...." இப்படி வருடத்தை சொல்லாமல் வெறுமனே 'ஆக., 31க்குள் முடிக்க' என்று சொன்னா எந்த வருடம் ஆக., 31 என்று எடுத்துக் கொள்வது? 2036?

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்