Load Image
dinamalar telegram
Advertisement

ஒரு பெரிய ஆளின் உயரம் தெரியவில்லை!

Tamil News
ADVERTISEMENT
பிரபல தமிழ் நடிகர் மாதவன்: ஜாலியாக ஒரு படம் பண்ணலாம்னு என்று நினைத்து, 'இஸ்ரோ' விஞ்ஞானியாக இருந்த நம்பி நாராயணனை பார்க்கச் சென்றால், அவர் வேறு மாதிரியாக இருந்தார்.

அவர் ஒரு, சாதாரண வழக்கில் சிக்கிய மாதிரி தெரியவில்லை. அவர் பட்ட வேதனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. அன்னிய சக்திகளின் சதி வலையில் சிக்கி, பல கொடுமைகளை அனுபவித்திருக்கிறார். 'குற்றவாளி இல்லை' என்று தீர்ப்பு வந்த பின்னும், ௨௦ ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்திஉள்ளார். குற்றஞ்சாட்டப்பட்ட போது அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் ஏற்பட்ட மன உளைச்சல், வேதனை, துன்பம் சொல்லி மாளாது.

அவர் மீதான மக்களின் பார்வையே, அந்த நேரத்தில் மாறி விட்டது. இதை எல்லாம் கேட்ட பின், அவரது வாழ்க்கையை என்னால் முற்றிலும் உணர முடிந்தது. 'உங்களிடம் உண்மை இருந்தால், நீங்கள் கடைசி எல்லை வரைக்கும் போராடலாம்' என்பதும் புரிந்தது; அவரது வாழ்க்கையின் செய்தியே அது தான்.நம்பி நாராயணனின் வாழ்க்கையை வைத்தே, மூன்று திரைப்படம் தயாரிக்கலாம். அப்படி, ஒரு 'மிடில்கிளாஸ்' மனிதன் எப்படி இவ்வளவு உயரத்திற்கு வந்து சேர்ந்தார்.

அவர் இஸ்ரோவில் செய்த சாதனைகள், அவரது வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. 'விக்விட் ப்யூல் இன்ஜின்' உருவாக்கத்தில், அவருக்கு இருந்த ஆற்றல், திறமை எல்லாவற்றையும் சொல்லத் துணிந்தேன். அவருடைய வாழ்க்கையை முழுவதாக சொல்லும் படம் தான், ராக்கெட்ரி.அவர் தமிழர் என்றும், முதலில் எனக்குத் தெரியாது. அவரின் சாதனைகளை பார்க்கும் போது, இந்த கேஸ் எனக்குச் சின்னதாக ஆகிவிட்டது. படத்தில் அந்த கேஸ் ஏழு நிமிஷம் தான் வருது. நம்பி நாராயணன் யார் என்பது தான், என் தேடலாக இருந்தது. ஒரு பெரிய ஆளின் உயரம் தெரியாமல் இருக்கிறோம்; அதுவே, பெரிய குற்றமாக எனக்குப் பட்டது.

ராக்கெட் சயின்ஸ் பற்றி சொல்வது சாதாரண விஷயமல்ல; பொதுமக்களுக்கு புரிய வேண்டும். நடிகர் ஷாருக்கிட்டே, நம்பி நாராயணன் கதையை சொல்லிஇருக்கேன். அவரோட பிறந்த நாள், பார்ட்டிக்குப் போனேன். 'மாதவன், உன் படத்துல நான் இருக்கணும்'னு சொன்னார். நான் வேடிக்கைன்னு நினைச்சுட்டு, 'ஓகே ஷாரூக்'ன்னு கட்டிப் பிடிச்சுட்டு வந்துட்டேன். அடுத்த நாள், 'நன்றி'ன்னு செய்தி அனுப்பினால், 'எப்ப ஷூட்டிங்'னு பதில் அனுப்புகிறார்; சம்பளம் ஒரு பைசா வாங்கவில்லை. அந்த மனசெல்லாம் ரொம்பப் பெருசு. நடிகர் சூர்யாவும், விமானத்தில் வந்து நடித்துக் கொடுத்தார்; அவரும் 1 ரூபாய் கூட வாங்கவில்லை. பிளைட் சார்ஜ், அசிஸ்டென்ட்ஸ்னு எல்லாவற்றுக்கும், அவரே செலவழித்து தான் நடித்து கொடுத்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (1)

  • Narasimhan - Manama,பஹ்ரைன்

    உண்டியல் குலுக்கிகளுக்கு பொய் பித்தலாட்டம் செய்பவர்களைதான் பிடிக்கும்

Advertisement