Load Image
dinamalar telegram
Advertisement

ஆன்-லைன் வருகையால் வரிசைகளை ஒழித்தோம்: பிரதமர் மோடி

காந்திநகர்-“ஆன் -- லைன் வசதியை பயன்படுத்த துவங்கியதால் பல இடங்களில் வரிசையில் நிற்பது ஒழிந்துள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
Latest Tamil News
குஜராத்தின் காந்தி நகரில் நேற்று, 'டிஜிட்டல் இந்தியா' நிகழ்ச்சியை துவக்கி வைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:மக்களின் வாழ்க்கை முறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதில், டிஜிட்டல் வசதி முக்கியப் பங்கு வகிக்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பிறப்புச் சான்றிதழ், கட்டணம் செலுத்துதல், பள்ளி மற்றும் கல்லுாரி அட்மிஷன், தேர்வு முடிவுகள் மற்றும் சான்றிதழ் பெறுதல், வங்கி உள்ளிட்ட இடங்களில் வரிசையில் நின்று காத்திருந்தோம்.

Latest Tamil News ஆனால், டிஜிட்டல் வசதியை பயன்படுத்த துவங்கிய பிறகு வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்குவது முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டம், ஊழல்வாதிகளிடம் இருந்து ஏழைகளை காப்பாற்றியுள்ளது மட்டுமின்றி, இடைத்தரகர்களையும் ஒழித்துள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram

Dinamalar iPaper

Advertisement
 

Comment Here வாசகர் கருத்து (8)

 • அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா

  காந்தியால் தான் சுதந்திரம் கிடைத்தது. அம்பேத்கரினால்தான் அரசியல் அமைப்பு கிடைத்தது. நேருவினால் தான் தொழிற்சாலைகள் வந்தன. இந்திராவால் தான் வறுமை ஒழிந்தது. ராஜிவ்வால் தான் கம்ப்யூட்டர் வந்தது. பெரியாரால் தான் சாதி ஒழிந்தது. கலைஞரால் தான் சூத்திரன் படிக்க முடிந்தது. இதெல்லாம் உண்மை என்றால் மோடியால் தான் க்யூ சிஸ்டம் ஒழிந்தது என்பதும் உண்மை தான். மேற்படி விஞ்ஞானிகள் இல்லாவிட்டால் இந்தியர்கள் குகையில் வாழ்ந்து வேட்டை ஆடி உணவு கொண்டு சந்தோசமாக இருந்திருப்பார்களாம்.

  • ஆரூர் ரங் - ,

   காந்தியால் விடுதலை கிடைத்தது என்றால் அப்போ நேதாஜி பல் குத்திக் கொண்டிருந்தாரா? 😉ராஜிவ் காலத்தில் ஒரு கணினி கூட நம் நாட்டில் தயாரிக்கப்படவில்லை. அவர் செய்த ஒரே வேலை கம்ப்யூட்டர்களுக்கு இந்திரா விதித்த அதிக இறக்குமதி வரியைக் குறைத்தார். அப்போ அம்மா அதிக வரி போட்டதை கண்டித்தாரா? உண்மையில் ஏகபோக IBM நிறுவனத்தை வெளியேற்றி நம் நாட்டு கணினி நிறுவனங்களுக்கு ஆதரவளித்த 🙏🙏திரு. ஜார்ஜ் பெர்னாண்டஸ் தான் கணினி புரட்சி செய்தவர்.

 • R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா

  இந்த நாட்டில் டிஜிட்டல் முறையை கொண்டு வந்ததினால் லஞ்சம் ஒழிக்கப்பட்டு விட்டது ஊழல் வாதிகளிடமிருந்து ஏழைகள் காப்பாற்றப் பட்டுள்ளனர் இடை தரகர்கள் ஒழிக்கப்பட்டுவிட்டனர் என்பதெல்லாம் பொய்யான பிரசாரம்.இணைய வழி மனு செய்தாலும் லஞ்சம் இன்றேல் எந்த சேவையும் இல்லை என்ற நிலை தான் நீடிக்கிறது.வங்கிகளில் எதெற்கெடுத்தாலும் வரிசையில் நிற்பது மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது.

 • அப்புசாமி -

  ஹுக்கும்... இவரே ஏதோ ஆன்லைனை கண்டிபிடிச்ச மாதிரி. எவனோ அமெரிக்காக்காரன் கண்டுபுடிச்சதை இங்கே கொண்டாந்து இறக்கிட்டா போதுமா? 20, 25 வருஷத்துக்கு முன்னாடியே கம்ப்யூட்டரஸ்டு ரிசர்வேஷன் வந்த போது ரயில் நிலையங்களில் க்யூ ஒழிஞ்சுது. முடிஞ்சா திருப்பதி கோவிலில் கியூவை ஒழிக்கப் பாருங்க.

 • Sai - Paris,பிரான்ஸ்

  இது ஒரு விஞ்ஞான முன்னேற்றம் அரசியல் முன்னேற்றமா?

  • vadivelu - thenkaasi,இந்தியா

   அரசியல் செய்யாமல், விஞ்ஞான முன்னேற்றத்தை ஆதரித்தது பாராட்டணும், சிதக்பரம் டிஜிட்டல் இந்தியா என்பது நடக்காத காரியம் என்று சொன்னார்.மாற்றங்களை வரவேற்கணும், அரசியல் லாபத்திற்காக மக்களுக்கு தெரியாமல் இருக்க வைக்க கூடாது.

  • Sai - Paris,பிரான்ஸ்

   சரியா சொல்றாரு அதுபோல ஆளும் கட்சிக்கும் பிரதமர் நிதிக்கும் வந்தது எவ்வளவு என்று மக்களுக்கு தெரியாமல் இருக்க வைக்க கூடாதுதானே?

  • Sai - Paris,பிரான்ஸ்

   எவ்வளவு சம்பாதித்தார்கள் எங்கெங்கே முதலீடு செய்தார்கள் எப்படி செத்தார்கள் எங்கே போனது எல்லாம் என்று இன்றுவரை மக்களுக்கு தெரியாமல் இருக்க வைக்க கூடாதுதானே?...

Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்